தாக்கி அழிக்கப்பட்டரஷ்யாவின் ராடர் நிலையம்
30 Sep,2023
உக்ரைன் பாதுகாப்பு சேவையின் ஆளில்லா விமானம் செப்ரெம்பர் 28 அன்று ரஷ்ய கூட்டமைப்பின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கஸ்டா ரஷ்ய ராடர் நிலையத்தை தாக்கி அழித்துள்ளது.
குர்ஸ்க் ஒப்லாஸ்ட்டின் பெலோவ்ஸ்கி மாவட்டத்தின் கிரி குடியிருப்புக்கு அருகில் இரகசியமாக நிறுவப்பட்டிருந்த கஸ்டா ரஷ்ய ராடர் நிலையத்தையே எஸ்எஸ்யு ட்ரோன் கண்டறிந்து அழித்ததாக உக்ரைன் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திருட்டுத் தொழில்நுட்பம் கொண்ட விமானங்களைக் கூட கண்டறியும்
"குறித்த ராடர் நிலையம் திருட்டுத் தொழில்நுட்பம் கொண்ட விமானங்களைக் கூட கண்டறியும் திறன் வாய்ந்தது என்று ரஷ்யா தெரிவித்து வந்தது. இந்த ராடரின் தனித்தன்மை மிகக் குறைந்த உயரத்தில் வான்வழி இலக்குகளை அடையாளம் காணும் திறன் கொண்டதாகும்.
தனித்தன்மை கொண்ட
இவ்வாறு தனித்தன்மை கொண்ட ராடர் நிலையத்தையே தமது ஆளில்லா விமானம் தாக்கி அழித்துள்ளதாக உக்ரைன் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.