11-வது முறையாக பாதுகாப்பு ஊழியரை கடித்த ஜோ பைடனின் வளர்ப்பு நாய்
29 Sep,2023
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படை ஊழியரை நாய் கடித்துள்ளது. வெள்ளை மாளிகைக்கு நாய் வந்தது முதல் 2022-ம் ஆண்டு நவம்பர் வரை 10 முறை பாதுகாவலர்களை கடித்துள்ளது. மேலும் படிக்க வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர், துணை அதிபர், முன்னாள் அதிபர் மற்றும் அவர்களின்
குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் ஜெர்மன் ஷெப்பர்டு இனத்தை சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படை ஊழியரை நாய் கடித்துள்ளது. உடனடியாக அந்த பாதுகாவலருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் தற்போது நலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளை மாளிகைக்கு இந்த நாய் வந்தது முதல் 2022-ம் ஆண்டு நவம்பர் வரை 10 முறை இது போன்று பாதுகாவலர்களை கடித்துள்ளது. இந்நிலையில் 11-வது முறையாக நேற்றும் ஒரு பாதுகாப்பு ஊழியரை கடித்துள்ளது.