BOSCH" நிறுவனம்.. 13 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவ
28 Sep,2025
"
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகளை உயர்த்தி தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக வாகன சந்தையில் மந்தமான சூழல் நிலவி வருவதால் வாகன உற்பத்தியும் வெகுவாக சரிந்துள்ளது. இதனால் டெஸ்லா, பிஒய்டி ஆகிய நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டன. இந்நிலையில், போஸ் நிறுவனமும் 13 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவை எடுத்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து தாறுமாறாக முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். இதனால் அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் பாதிப்புகள் நிலவிக் கொண்டிருக்கின்றன. முக்கியமாக இந்தியாவை குறிவைத்து அதிகளவு நடவடடிக்கை எடுத்து வருகிறார். விசா விவகாரம் தொடங்கி வரி உயர்வு வரை உள்ள நடவடிக்கைகளை எடுத்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கிறார்.
இந்தியாவுடன் நட்பு நாடாக இருந்த அதில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், டிரம்ப் மறுபக்கம் பாகிஸ்தான் நாட்டுடன் நட்பு பாராட்டி வருகிறார். சமீபத்தில் ஹெச் 1 பி விசாவில் டொனால்ட் டிரம்ப் அறிவித்த அதிரடி மாற்றங்கள் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிபராவதற்கு முன்பு டிரம்புடன் நெருக்கமாக இருந்த தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளிட்டோரே அவருடன் கருத்து வேறுபாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியா மீது ஏற்கனவே 50 சதவீதம் வரி உயர்வை சுமத்தி நெருக்கடி கொடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்நிலையில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரியும், சமையல் அலமாரி உள்ளிட்ட பொருட்களுக்கு 50 சதவீதம் வரியும் விதித்து அறிவித்துள்ளார். அதனுடன் மேலும் சிலவற்றுக்கு வரி உயர்வை அறிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் வரி உயர்வு காரணமாக செலவு அதிகரித்துள்ளதால் வாகன உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறி 13 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய போஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
" வாகன உதிரி பாகங்கள் தயாரித்து வருகிறது போஸ் நிறுவனம். உலகில் முன்னணி நிறுவனங்களில் போஸ் ஒன்றாகும். ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உலகம் முழுவதும் இருந்து 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், வாகன சந்தையில் தற்போது மந்தமான சூழல் நிலவி வருவதால் வாகன உற்பத்தி சரிந்துள்ளது.
இந்த உற்பத்தி சரிவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள கட்டணங்களால் ஏற்பட்ட செலவு அதிகரிப்பும் ஒரு காரணம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாகன உற்பத்தி சரிந்துள்ளதால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில் டெஸ்லா, பிஒய்டி ஆகிய உற்பத்தி நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், போஸ் நிறுவனமும் உலகம் முழுவதும் உள்ள அந்நிறுவனத்தின் கிளைகளில் பணியாற்றி வரும் 13 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யும் முடிவை போஸ் நிறுவனம் எடுத்துள்ளது.