மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மீண்டும் ஆட்குறைப்பு..
03 Jul,2025
பணியாளர்களை வேலையைவிட்டு நீக்கப்போவதாக மைக்ரோடசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக, பணியாளர்களை வேலையைவிட்டு நீக்கப்போவதாக மைக்ரோடசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி ஒன்பதாயிரம் பணியாளர்களை வேலையைவிட்டு நீக்கவிருப்பதாக உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் கூறியுள்ளது.
இந்தியரான சத்ய நாதெல்லா முதன்மை செயல் அதிகாரியாக உள்ள மைக்ரோ சாஃப்ட் நிறுவனம், ஏ.ஐ. தொழில்நுட்பம் காரணமாக தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் மே மாதம் 6,000 பேரை பணிநீக்கம் செய்தது, அடுத்த சில நாட்களில் 300 பேரை வீட்டுக்கு அனுப்பியது.
இந்த நிலையில் தனது பணியாளர்களில் 4 சதவிகிதம் பேர், அதாவது 9,000 பேரை பணிநீக்கம் செய்யவிருப்பதாக தற்போது அறிவித்துள்ளது. இதற்கான பணிநீக்க ஆணைகளை அனுப்ப தொடங்கிவிட்டதாகவும் மைக்ரோ சாஃப்ட் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த முறை சாஃப்ட்வேர் மற்றும் உற்பத்தி துறை பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது விற்பனை பிரிவில் உள்ளவர்கள் வேலையைவிட்டு அனுப்பப்படுகின்றனர். கடந்த ஆண்டு ஜூன் மாத கணக்கின்படி, மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தில் 2 லட்சத்து 28 ஆயிரம் பேர் பணியாற்றி வந்தனர்.