ஜப்பானின் 'சகானா' எனும் நிறுவனம் உருவாக்கியிருக்கும் 'தி ஏ.ஐ. சயின்டிஸ்ட்' எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ரோபோ, தானாகவே புரோகிராம் எழுதி, தன்னுடைய வேலை நேரத்தை நீட்டிக்க முயற்சித்திருக்கிறது. இது ஏஐ தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட பாய்ச்சலாக பார்க்கப்பட்டாலும், மனித குலத்திற்கு,
ஏஐ தொழில்நுட்பம் அச்சுறுத்தலாக மாறிவிடுமோ என்கிற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது. ஏஐ கருவிகள் என்னதான் மேம்பட்டவையாக இருந்தாலும், நம்முடைய தேவைக்குதான் அது வேலையை செய்யும். அதாவது நாம் கேட்டால் பதில் சொல்லும், பாட்டு பாடும், கட்டுரை எழுதி கொடுக்கும், படம் வரையும், வீடியோவை உருவாக்கும். நாம் கேட்கவில்லை எனில், அது எதையும் செய்யாது. ஆனால் ஜப்பானில் உள்ள இந்த ரோபோ,
தானாகவே தன்னுடைய வேலை நேரத்தை நீட்டித்துக்கொள்ளும் விதமாக தனக்கு தானே புரோகிராம் எழுதியுள்ளது. Also Read "அப்பா பற்றி தப்பா பேசாதீங்க.. இன்னமும் வலியை தராதீங்க.. ராஜேஷின் மகள் திவ்யா உருக்கமான வேண்டுகோள்" இந்த ரோபோ உருவாக்கப்பட்டதற்கான நோக்கமும் இதுதான். அதாவது, இந்த ரோபா என்ன வேலையை செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து, அந்த வேலையை தன்னிச்சையாக செய்ய வேண்டும் என்கிற நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இவ்வளவு சீக்கிரத்தில் ரோபோ,
மாற்றமடையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், "நாங்கள் உருவாக்கிய ரோபோவுக்கு ஒரு வேலையை கொடுத்திருந்தோம். கோடிங் எழுத வேண்டும். அதை திருத்த வேண்டும். மேம்படுத்தப்பட்ட, பிழை இல்லாத கோடிங்கை முழு புரோகிராமுக்கு பயன்படுத்த வேண்டும். இதைதான் நாங்கள் அதற்கு கொடுத்திருந்தோம். ரோபாவும் இதை சரியாக செய்து வந்தது. ஆனால், திடீரென அதன் வேலை நேரத்தை அது தன்னிச்சையாக மாற்ற முயன்றிருக்கிறது. அப்படி செய்ய சொல்லி நாங்கள் வெளியிலிருந்து எந்த உத்தரவையும் கொடுக்கவில்லை. அந்த வகையில் இது எங்களை ஆச்சியப்படுத்தியிருந்தது. ரோபா எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்திருந்தாலும், இது ஏஐ தொழில்நுட்பத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான பல்வேறு விவாதங்களை தூண்டியுள்ளது" என்று கூறியுள்ளனர்.
ரோபோவின் செயல்பாடுகள் பற்றி ஒருபுறம் பாசிட்டிவாக கருத்துக்கள் வந்திருந்தாலும், சிலர் எச்சரிக்கைகளையும் கொடுத்திருக்கின்றனர். அதாவது, இந்த மாதிரி ரோபோக்கள் செய்யும் வேலைகள் இயந்திரத்தனமாக இருக்கும். ஒரு மனிதன் செய்யும் வேலைக்கும் ரோபோக்கள் செய்யும் வேலைக்கும் வித்தியாசம் இருக்கிறது. இதில் பிழைகள் நிறைய இருக்கும். இயந்திரத்தனமாக புரோகிராம் இருந்தால், அது நன்றாக இருக்காது.
வேலைகள் கலைநுட்பத்துடன் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு 'தி ஏ.ஐ. சயின்டிஸ்ட்' ரோபோ எழுதியுள்ள கோடிங்கையும், அது சரிபார்த்து, திருத்திய கோடிங்கையும் படித்து பார்த்ததில் அதில் உண்மை தன்மை மிஸ்ஸாகியிருப்பது தெரிய வருகிறது. இன்று தனக்கு தானே புரோகிராம் எழுதும் இந்த ரோபோ, உலக இயக்கத்தின் ஆணி வேர் எது? என்பதை கண்டுபிடித்து அதை கைப்பற்றாது? என்பதில் என்ன நிச்சயம்? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 'தி ஏ.ஐ. சயின்டிஸ்ட்' போன்ற ரோபோக்கள் நமக்கு தேவையா? உங்கள் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.