நடுவானில் மயங்கிய விமானி.. ஆளே இல்லாமல் பறந்த விமானம்..
18 May,2025
விமானத்தை இயக்கிக் கொண்டிருந்த பைலட் திடீரென மயக்கமடைந்தால் சுமார் 10 நிமிடங்கள் விமானம் அப்படியே இயங்கியுள்ளது. விமானத்தில் சுமார் 200+ மேற்பட்டோர் இருந்த நிலையில், நல்வாய்ப்பாக விமானத்திற்கு எதுவும் ஆகவில்லை. இது தொடர்பான செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இப்போது விமான பயணங்களைச் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
விமான பயணம் என்பது பொதுவாகவே மிகவும் பாதுகாப்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதையும் தாண்டி சில சம்பவங்கள் நடந்துவிடும். அப்படி விமானத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது. மயங்கிய விமானி அதாவது பொதுவாக நீண்ட தூர விமானத்தில் இரு விமானிகள் இருப்பார்கள். விமானம் புறப்பட்டு சில மணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் சுழற்சி முறையில் ஓய்வெடுப்பார்கள். அப்படி தான் ஸ்பெயினுக்குச் சென்ற லுஃப்தான்சா விமானத்தில் விமானி ஓய்வெடுக்கச் செல்லவே துணை விமானி மட்டும் விமானத்தை இயக்கியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாகத் துணை விமானி மயக்கமடைந்த நிலையில், சுமார் 10 நிமிடங்கள் விமானியே இல்லாமல் விமானம் பயணித்துள்ளது. அந்த 10 நிமிடங்கள் முழுக்க முழுக்க ஆடோபைலட் முறையில் விமானம் இயங்கியதாக ஜெர்மன் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு பிப்ரவரி மாதம் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. என்ன நடந்தது அப்போது விமானம் ஜெர்மனியின் பிராங்பேர்ட்டிலிருந்து ஸ்பெயினுக்கு புறப்பட்டுள்ளது. அப்போது கேப்டன் ஓய்வெடுக்கச் சென்றுவிட்ட நிலையில், விமானத்தை இயக்கிக் கொண்டிருந்த துணை விமானி மயக்கமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பானிஷ் விபத்து விசாரணை ஆணையம் இது தொடர்பாக விசாரணையையும் நடத்தியிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளே இல்லாமல் இயங்கிய விமானம் 199 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களை ஏற்றிச் சென்ற விமானம், எந்தவொரு விமானியின் கண்ட்ரோலும் இல்லாமல் சுமார் 10 நிமிடங்கள் பறந்ததாகக் கூறப்படுகிறது. இதுபோல ஒரு சம்பவம் நடந்ததை லூப்தான்சா விமான நிறுவனமும் உறுதி செய்துள்ளது. தங்கள் நிறுவனத்தின் புதாகாப்பு பிரிவும் இது குறித்து விசாரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் அதன் முடிவுகள் என்ன என்பதை லூப்தான்சா பகிரவில்லை. மயக்கம் துணை விமானி மயக்கமடைந்துவிட்ட போதிலும் அவர் விமானத்தை இயக்க முயன்றுள்ளார். இருப்பினும், அப்போது ஆடோபைலட் செயல்பாட்டில் இருந்ததால் அது எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் பணித்துள்ளது. ஆடோபைலட் ஆனில் இல்லாமல் இருந்திருந்தால் துணை விமானி மயக்கத்தில் ஆபரேட் செய்ய முயன்றதில் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். இந்த காலகட்டத்தில் காக்பிட்டில் பதிவான வாய்ஸ்கள் ஆய்வு செய்யப்பட்டன.
அதில் துணை விமானியின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. சுமார் 10 நிமிடங்கள் கழித்து விமானி மீண்டும் காக்பிட்டிற்கு வர முயன்றுள்ளார். பொதுவாக விமானங்களில் பாதுகாப்பு கருதி காக்பிட்டிற்கு தனியாக லாக் இருக்கும். விமானி அதை உள்ளே லாக் செய்தே இருப்பார். வெளியே இருந்து வர முயல்வோர். காக்பிட்டை
அதுபோல விமானி காக்பிட்டிற்குள் நுழைய ஆக்செஸ் கேட்டுள்ளார். இருப்பினும், துணை விமானி மயக்கத்தில் இருந்ததால் அவரால் திறக்க முடியவில்லை. சுமார் 5 முறை இதுபோல ஆக்செஸ் கேட்டு முயன்றுள்ளார். இடையில் விமானப் பணிப்பெண்ணும் தொலைப்பேசி மூலம் துணை விமானியைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.
ஆனால் முடியவில்லை. இதனால் அங்குச் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது கடைசியில் கேப்டன் தனக்கு வழங்கப்பட்ட எமெர்ஜென்சி கோட் மூலம் கதவைத் திறக்க முயன்றுள்ளார். சரியாக அப்போது மயக்கத்தில் இருந்து எழுந்த விமானி அவராகவே வந்து கதவைத் திறந்துள்ளார். அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் மாட்ரிட்டில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அங்குத் துணை விமானி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.