அமெரிக்க சூப்பர் கணினியைவிட 10 லட்சம் மடங்கு வேகம்.. குவாண்டம் கம்ப்யூட்டர் அறிமுகம்
13 Mar,2025
அமெரிக்காவின் கூகுள் சூப்பர் கம்ப்யூட்டரை விட 10 லட்சம் மடங்கு அதிக வேகமான கம்ப்யூட்டரை சீனா கண்டுபிடித்து அசத்தியிருக்கிறது. இதன் மூலம் கூகுள் கணினி செய்யும் வேலையை ஒரு நொடிக்கும் குறைவாக சீன கம்ப்யூட்டர் செய்து முடித்துவிடும். சீனாவின் கண்டுபிடிப்பு அறிவியல் துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தம் என்று சொல்லப்படுகிறது. எந்த மாதிரியான மாற்றம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சீனாவின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை (USTC) சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த சூப்பர் குவாண்டம் கம்ப்யூட்டரை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு அவர்கள் 'ஜுச்சோங்ஷி - 3' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கடந்த 2019ம் ஆண்டு கூகுள் நிறுவனம் இதேபோன்ற சூப்பர் கம்ப்யூட்டரை வடிவமைத்திருந்தது. இது அசாத்தியமான திறன் கொண்ட கணினியாக இருந்தது. சாதாரண கம்ப்யூட்டர்கள் 10,000 ஆண்டுகளில் செய்யும் வேலையை இந்த கம்ப்யூட்டர் வெறும் 200 விநாடிகளில் செய்து அசத்தியது. ஆனால், சீனா 2023ம் ஆண்டு ஜுச்சோங்ஷி வகை சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்க தொடங்கினார்கள்.
இது, கூகுளின் சூப்பர் கணினி 200 விநாடிகளில் செய்யும் வேலையை வெறும் 14 விநாடிகளில் செய்து அசத்தியது. அப்போதிலிருந்து கூகுள் நிறுவனத்தின் கணினிக்கும், சீனாவின் சூப்பர் கம்ப்யூட்டருக்கும் இடையே பெரிய போட்டி தொடங்கியது. இதன் விளைவாகத்தான் ஜுச்சோங்ஷி - 3 உருவாக்கப்பட்டிருக்கிறது. இது கூகுளின் சூப்பர் கம்ப்யூட்டரை விட 10 லட்சம் மடங்கு அதிவேகமானதாக இருக்கிறது. அதாவது கூகுள் கணினி 200 விநாடிகளில் செய்யும் வேலையை 1 நொடிக்குள் முடித்து காட்டியிருக்கிறது. 1 நொடிக்கும் குறைவான நேரத்தை ஆய்வாளர்கள் 'ஃபெம்டோசெக்கண்ட்'(femtoseconds) என்று குறிப்பிடுகிறார்கள்.
சவால்" இதில் 15வு7 105 க்யூபிட்களும், 182 கப்பளர்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதன் செயல் திறனை கீழ் கண்டவாறு விளக்கலாம். Single-qubit gate: 99.90% Two-qubit gate: 99.62% Readout fidelity: 99.13% Coherence time: 72 மைக்ரோசெகண்ட்ஸ் ஏன் இதுபோன்று சூப்பர் கம்ப்யூட்டர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன? இதற்கான தேவை என்ன இருக்கிறது? என்பது குறித்து கேள்விகள் எழலாம். சில ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா பெருந்தொற்று உலகையே புரட்டி போட்டது. இதற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் IBM-ன் Quantum Computing முக்கிய பங்கு வகித்தது. இரசாயன அணுக்கள் மற்றும் புரதங்களை (Proteins) குவாண்டம் கணினிகளால் கணக்கீடு செய்து, புதிய மருந்துகளுக்கான வடிவமைப்பு எளிதாக முடியும்
எய்ட்ஸ், புற்றுநோய், அல்சைமர் போன்ற நோய்களுக்கான மருந்துகளை கண்டுபிடிக்கவும் சூப்பர் கம்ப்யூட்டர் மிக உதவியாக இருக்கும். தவிர மருத்துவ தரவுகள், அரசாங்க தகவல்களை பாதுகாக்கவும், மழை, புயல், வெப்பநிலை மாற்றம் போன்றவற்றை மிகச்சரியாக கணிக்கவும் இவை உதவும். NASA, IBM, Google போன்றவை வானிலை ஆய்வுக்காக குவாண்டம் கணினிகளைப் பயன்படுத்துகின்றன. மட்டுமல்லாது Cryptocurrency, Bitcoin, Blockchain போன்றவற்றில் பாதுகாப்பை அதிகரிக்கலாம். ஆக இந்த வகை கம்ப்யூட்டர்கள் மிகப்பெரிய ஆய்வுக்காவே பயன்படுத்தப்படுகின்றன. நம்மை போன்ற சாமானிய மக்களின் கைகளுக்கு இது வர இன்னும் 20 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.