மணிக்கு 450 கிலோ மீட்டர் வேகம் செல்லும் ரயிலை அறிமுகம் செய்துள்ளது சீனா
07 Mar,2025
. 'சிஆா்450' புல்லட் ரயில் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில் குறுகிய தொலைவு உள்ள நகரங்களுக்கு இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். மின்னல் வேகத்தில் இந்த ரயில் பயணிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் அண்டை நாடான சீனா, பல்வேறு துறைகளிலும் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. உள்கட்டமைப்பு, போக்குவரத்து, டெக்னாலஜி என எந்த துறையை எடுத்தாலும் உலக வல்லரசாக தன்னை காட்டிக்கொள்ளும் அமெரிக்காவிற்கு சவால் அளித்து மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு வளர்ச்சியை பெற்று வருகிறது. அமெரிக்காவுக்கு டஃப் கொடுக்கும் சீனா ஓபன் ஏஐ, போன்ற தொழில் நுட்பத்தை பல பில்லியன் டாலர் செலவில் அமெரிக்க நிறுவனம் அறிமுகப்படுத்தினால், மிக குறைந்த செலவில் டீப் சீக் எனப்படும் ஏஐ செயலியை இறக்கி தொழில் நுட்ப உலகை மிரள வைத்தது. இப்படி எல்லா வழிகளிலும் அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் நாடாக உள்ள சீனா, தற்போது உலகின் அதிவேக ரயிலை
களமிறக்கியுள்ளது. மணிக்கு 400 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய ரயிலின் முதல் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை டூ குமரிக்கு ஒன்றரை மணி நேரம் தான் இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 450 கிலோ மீட்டர் வேகம் செல்லக் கூடியது. நம்ம ஊர் கணக்கிற்கு எடுத்துக்கொண்டால் சென்னையில் இருந்து சுமார் 664 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கன்னியாகுமரிக்கு சுமார் ஒன்றரை மணி நேரத்தில் இந்த ரயிலில் செல்ல முடியும். CR450 என்ற இந்த ரயில் காற்றை கிழித்தபடி சீறிப்பாயும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தற்போது சீனாவில் செல்லக் கூடிய அதிவேக ரயிலின் வேகம் மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகம்.
இந்த ரயிலை விட 50 கிலோ மீட்டர் வேகம் அதிகம் செல்லக்கூடிய ரயிலை சீனா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்து இருக்கிறது. எட்டு பெட்டிகளை கொண்ட இந்த ரயில், வாட்டர் கூலர் மற்றும் காந்த இழுவை திறன் பயணிக்க கூடியது. அதிநவீன மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் இது தயாரிக்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. குறைவான தொலைவு கொண்ட நகரங்களுக்கு இடையே இந்த ரயிலை இயக்க சீனா திட்டமிட்டுள்ளது. 10 சதவீதம் எடை குறைவாக இருக்கும் பீஜிங் - ஷாங்காய் போன்ற 4 மணி நேர தொலைவு கொண்ட நகரங்களுக்கு இடையே இது இயக்கப்படுமாம். அடுத்த ஆண்டு துவக்கத்திற்குள் இந்த ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிவேகமாக செல்லக் கூடிய வகையில்,
குறைந்த எடை கொண்ட கார்பன் பைபர் மற்று அலுமினியம் போன்றவை மூலமாக இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. முந்தைய ரயில்களை விட 10 சதவீதம் எடை குறைவாக இருக்குமாம். ரயிலின் உட்புறமும் பயணிகள் சொகுசாக பயணிக்க பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வோர்க்குகளை கொண்ட நாடுகளில் ஒன்றாக சீனா உள்ளது. சீனாவில் தற்பொது 48 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அதிவேக ரயில் போக்குவர்த்து வசதி உள்ள நிலையில், 2030 ஆம் ஆண்டுக்குள் இதை 60 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிகரிக்க வேண்டும் என்ற இலக்குடன் அந்த நாட்டு ரயில்வே செயல்பட்டு வருகிறதாம்.