ஏவுகணைகளை கொண்டு சண்டை போட்ட காலமெல்லாம் மலையேறி போய்விட்டது. இப்போது அதைவிட நவீன ஆயுதங்கள் வந்துவிட்டன. ரஷ்யா வசம் இருக்கும் இந்த நவீன ஆயுதம் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆயுதம் கடலுக்கு அடியில் இருப்பதாகவும், இதனால் எப்போது வேண்டுமானாலும் ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்படலாம் என்றும் அச்சம் எழுந்திருக்கிறது. என்ன ஆயுதம் அது? எப்படி வேலை செய்யும்? என்பது குறித்து விரிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது உலகம் முழுவதும் 95% இணைய சேவை கேபிள்கள் மூலமாகத்தான் கொடுக்கப்படுகிறது. செல்போனில் நாம் பயன்படுத்தும் இன்டெர்நெட்டை விட, கேபிள் இன்டெர்நெட் வேகம் அதிகம். எனவே ராணுவம் தொடங்கி மருத்துவம் வரை பல்வேறு துறைகளில் கேபிள்கள் மூலம் இணையம் என்பது அத்தியாவசியமானதாக இருக்கிறது. இந்த கேபிளை துண்டித்துவிட்டால் மொத்த நாடும் தடுமாறிவிடும். அந்த வேலையைதான் ரஷ்யா செய்வதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதற்காக ரஷ்யா பயன்படுத்தும் ஆயுதம்தான் உயர்திறன் கொண்ட நீர்மூழ்கி கப்பல்கள். சில நாட்களுக்கு முன்னர் பின்லாந்து நாட்டை எஸ்டோனியாவுடன் இணைக்கும் கடலுக்கு அடியில் செல்லும் முக்கிய மின்சார கேபிள் ஒன்று சேதமடைந்திருக்கிறது என்றும், இதற்கு ரஷ்ய கண்காணிப்பில் இயங்கும் ஈகிள் எனும் கப்பல்தான் காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்திருப்பதாக தமிழ் தெரிவித்திருக்கிறது.
இந்த சேதங்கள் வெளிப்படையானது. கப்பலின் நங்கூரம் இழுக்கப்படும்போது, அது கேபிளில் மாட்டி சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், ரஷ்யாவின் 'யான்டர்' எனும் நீர் மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள கேபிள்களிலிருந்து தகவல்களை திருடுவது மட்டுமல்லாது அதை சேதப்படுத்தவும் செய்கிறது. இதனை சமாளிக்கதான் ஈகிள் கப்பல் இருக்கிறது என ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.
ஆக ரஷ்யாவின் இந்த சக்திவாய்ந்த நீர் மூழ்கி கப்பலால் வேறு எந்த நாடுகளை விடவும் ஐரோப்பிய நாடுகளுக்குதான் அதிக பாதிப்பு என்றும் சொல்லப்படுகிறது. ஐரோப்பா உலகின் மற்ற நாடுகளுடன் தொடர்பில் இருக்க இந்த கேபிள்களைதான் நம்பியிருக்கிறது. மட்டுமல்லாது பாதுகாப்பு விஷயத்தில் நேட்டோவும் இந்த கேபிள்களைதான் நம்பியிருக்கிறது. இந்த கேபிள்கள் கடலில் பல கி.மீ ஆழத்தில் இருக்கும். அந்த ஆழத்திற்கு நீர்மூழ்கி கப்பல்களால் போக முடியாது. ஆனால், யான்டர் கப்பலில் இதற்கான சில குட்டி நீர்மூழ்கி ரோபோக்கள் இருக்கின்றன. அவற்றால் கேபிள்களை சேதப்படுத்த முடியும்.
மட்டுமல்லாது கேபிள்களிலிருந்து தகவல்களை திருடவும் முடியும். இந்த அச்சுறுத்தல் காரணமாக நேட்டோ கடல் அடியில் தனது பாதுகாப்பை தீவிர படுத்தியது. ரஷ்யாவை பொறுத்தவரை ஆழ்கடல் தகவல் சேகரித்தல் மற்றும் நாச வேலைகளை திட்டமிடுதல் ஆகியவை கடலடி ஆராய்ச்சி இயக்குனராகம் என்ற அமைப்பிடம் இருக்கிறது. இந்த அமைப்பு புதின் கட்டுப்பாட்டின் கீழ் நேரடியாக செயல்படுகிறது. எனவே ஆய்வு தகவல்கள் வெளியே கசிய சான்ஸ் இல்லை.
ஆக ரஷ்யாவின் இந்த சக்திவாய்ந்த நீர் மூழ்கி கப்பலால் வேறு எந்த நாடுகளை விடவும் ஐரோப்பிய நாடுகளுக்குதான் அதிக பாதிப்பு என்றும் சொல்லப்படுகிறது. ஐரோப்பா உலகின் மற்ற நாடுகளுடன் தொடர்பில் இருக்க இந்த கேபிள்களைதான் நம்பியிருக்கிறது. மட்டுமல்லாது பாதுகாப்பு விஷயத்தில் நேட்டோவும் இந்த கேபிள்களைதான் நம்பியிருக்கிறது. இந்த கேபிள்கள் கடலில் பல கி.மீ ஆழத்தில் இருக்கும்.
அந்த ஆழத்திற்கு நீர்மூழ்கி கப்பல்களால் போக முடியாது. ஆனால், யான்டர் கப்பலில் இதற்கான சில குட்டி நீர்மூழ்கி ரோபோக்கள் இருக்கின்றன. அவற்றால் கேபிள்களை சேதப்படுத்த முடியும். மட்டுமல்லாது கேபிள்களிலிருந்து தகவல்களை திருடவும் முடியும். இந்த அச்சுறுத்தல் காரணமாக நேட்டோ கடல் அடியில் தனது பாதுகாப்பை தீவிர படுத்தியது. ரஷ்யாவை பொறுத்தவரை ஆழ்கடல் தகவல் சேகரித்தல் மற்றும் நாச வேலைகளை திட்டமிடுதல் ஆகியவை கடலடி ஆராய்ச்சி இயக்குனராகம் என்ற அமைப்பிடம் இருக்கிறது. இந்த அமைப்பு புதின் கட்டுப்பாட்டின் கீழ் நேரடியாக செயல்படுகிறது. எனவே ஆய்வு தகவல்கள் வெளியே கசிய சான்ஸ் இல்லை.
உளவு மற்றும் தகவல்களை சேகரிக்கும் பணிகளுக்காக டைட்டானியம் ஹல் வகை நீர்மூழ்கி கப்பல்களை ரஷ்யா பயன்படுத்துகிறது. டைட்டானியம் இரும்பை விட மிகவும் உறுதித் தன்மை கொண்டது. துருப்பிடிக்காத என்பதால் நீரில் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இதனால் சிறப்பாக செயல்பட முடியும். அதேபோல எடையும் குறைவு என்பதால் நீருக்கடியில் வேகமாக செயல்படவும் முடியும். மட்டுமல்லாது இந்த கப்பலில் எஃகு கலக்கப்படாமல் இருப்பதால் சோனார் கொண்டு இந்த கப்பலை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான விஷயமாகும்.
பொதுவாக இராணுவ நீர் மூழ்கி கப்பல்கள் அதிகபட்சமாக 900 மீட்டர் வரை தான் செல்ல முடியும். ஆனால் ரஷ்யாவின் டைட்டானியம் கப்பல் அதிகபட்சமாக ஒரு கிலோ மீட்டர் ஆழம் வரை செல்லக்கூடிய திறன் கொண்டது. ஆக இதெல்லாம்தான் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்த காரணமாகும். இனி உலக போர் ஏற்பட்டால் தகவல் தொடர்பு சாதனங்களை துண்டிப்பதன் மூலம் போரின் போக்கையே மாற்ற முடியும். இதை ரஷ்யா தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் அதிகம். மட்டுமல்லாது கடலுக்கு அடியில் பதிக்கப்படும் கேபிளில் ஏதேனும் டேமேஜ் ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கு நிறைய செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.