கூகுள் கொடுத்த மிக முக்கிய அப்டேட்.... உடனே இதை செய்யுங்கள்.
02 Dec,2024
கூகுள் நிறுவனம் பல்வேறு செயலிகளை வெளியிட்டுள்ள நிலையில், அதில் மிக முக்கியமான செயலி என்றால் மேப்ஸ் தான்.. நீங்கள் இதற்கு முன்பு எங்கெல்லாம் போய் இருக்கிறீர்கள் என்ற லொகேஷன் ஹிஸ்டரி கூட இதில் சேமிக்கப்பட்டு இருக்கும். இந்த மேப்ஸ் செயலியில் இப்போது மிக முக்கியமான மாற்றம் வரவுள்ளது. உடனடியாக இதில் நீங்கள் செட்டிங்கிஸை மாற்றவில்லை என்றால் மொத்த டேட்டாவும் போய்விடும். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். இப்போது நமக்குப் பரபரப்பான நகர வாழ்க்கைக்கு பல்வேறு செயலிகள் கை கொடுத்து வருகிறது. அப்படி நமக்கு கை கொடுக்கும் முக்கியமான செயலிகளில் ஒன்று தான் கூகுள் மேப்ஸ்
.. மேப்ஸ்: முன்பெல்லாம் புதிய இடத்திற்குச் செல்கிறோம் என்றால் வழி கண்டுபிடித்துச் செல்வதே பெரும் போராட்டமாக இருக்கும். ஆனால், கூகுள் மேப்ஸ் அந்த பிரச்சினையை மொத்தமாக நீக்கிவிட்டது. பெரும்பாலான இடங்களுக்குக் கூகுள் மேப்பை பார்த்தே போய்விடலாம். மேப்பில் யூசர்களின் வசதிக்கேற்ப பல புதிய அம்சங்கள் கூகுள் கொண்டு வரும் நிலையில், தனியுரிமை சார்ந்து சில அப்டேட்களை வழங்கி வருகிறது. அதன்படி கடந்தாண்டு இது தொடர்பாகக் கூகுள் நிறுவனம் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. தங்கள் லொகேஷன் ஹிஸ்டரியை எப்படிச் சேமிக்க வேண்டும் என்பதில் கூகுள் முக்கிய மாற்றங்களை அறிவித்தது. அதாவது லொகேஷன் ஹிஸ்டரி எப்படிச் சேமிக்க வேண்டும் என்பதில் இரு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டது. முதல் ஆப்ஷன் மொபைலிலேயே சேமித்துக் கொள்ளலாம்.. அப்படியில்லை என்றால் என்கிரிப்ட் செய்யப்பட்ட காபியாக கிளவுட்டில் சேமிக்கலாம்.
மெயில் வரும்: கடந்தாண்டே கூகுள் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்ட போதிலும், அது உடனடியாக அமலுக்கு வரவில்லை. பல மாதங்களாக அறிவிப்புடன் மட்டுமே இது இருந்தது. இப்போது தான் அதை அமல்படுத்தப் போவதாகக் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பான மெயில்களை கூகுள் நிறுவனம் இப்போது எல்லா யூசர்களுக்கும் அனுப்பி வருகிறது. என்ன செய்ய வேண்டும்: கூகுள் மேப்பில் உள்ள எல்லா லொகேஷன் ஹிஸ்டரி தகவல்களும் டெலிட் ஆகும் முன்பு, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது. லொகேஷன் ஹிஸ்டரி டெலிட் ஆகும் தேதி என்பது ஒவ்வொரு யூசருக்கும் ஒவ்வொன்றாக இருந்தாலும் கூட,
செட்டிங்கை உடனடியாக மாற்றிவிட்டால் நல்லது. கடந்த மூன்று மாதங்களாக லொகேஷன் ஹிஸ்டரி கிளவுட்டில் தான் சேமிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. Advertisement சிக்கல் என்ன: கூகுள் உடன் நீங்கள் எந்தவொரு தரவுகளையும் பகிர விரும்பவில்லை.. அதேநேரம் எப்போது எங்கே சென்று இருக்கிறேன் என்பதையும் பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் ஆஃப்லைனில் சேமிக்கலாம். ஆனால், இதில் இரண்டு சிக்கல் இருக்கிறது. அதாவது ஏற்கனவே கடந்த 3 மாதங்கள் கிளவுட்டில் தான் லொகேஷன் சேமிக்கப்படுவதால் நீங்கள் ஆஃப்லைனுக்கு மாற்றும் போது 3 மாத லொகேஷன் ஹிஸ்டரி இருக்காது. அதேபோல இன்னொரு சிக்கல் ஒரு சாதனத்தில் மட்டுமே சேமிக்கப்படும் என்பதால் நீங்கள் வேறு மொபைலை பயன்படுத்தத் தொடங்கினால் லொகேஷன் ஹிஸ்டரி வராது. ஒருவேளை நீங்கள் உங்கள் விருப்பத்தைத் தேர்வு செய்யவில்லை என்றால் டிஃபால்ட்டாக நீங்கள் ஆஃப் லைன் மோடை தேர்வு செய்ததாகவே கூகுள் கருதும். இதனால் மூன்று மாத டேட்டாவை முதலில் நீக்கி, பிறகு மொபைலில் லொகேஷன் ஹிஸ்டரியை சேமிக்கத் தொடங்கும்.