40 கிலோ மீட்டர் தூரத்தை 5 நிமிடத்தில் கடக்கும் பறக்கும் ஏர் டாக்ஸி பெங்களூரில் அறிமுகம்
02 Nov,2024
40 கிலோ மீட்டர் தூரத்தை 5 நிமிடத்தில் கடக்கும் பறக்கும் ஏர் டாக்ஸி பெங்களூரில் அறிமுகம்.
பெங்களூரு இந்திரா நகரிலிருந்து விமான நிலையத்திற்கு வர 40 கிலோ மீட்டர் ஆகும். இதனை சாலை போக்குவரத்து வழியாக கடப்பது என்றால் சரியாக 1-1/2 மணி நேரம் ஆகும். இதற்கு டாக்ஸிக்கு கட்டணம் ரூ 2500.
ஆனால் தற்போது ஏர் டாக்ஸியில் எடுத்துக் கொள்ளும் நேரம் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே. இதற்கு கட்டணம் ரூ.1,700 ஆகும்.
பெங்களூர் இந்திரா நகர் பகுதியிலிருந்து விமான நிலையத்திற்கு பயணிகளை அழைத்து வர சரளா ஏவியேஷன் என்ற நிறுவனத்துடன் BIAL கூட்டு சேர்ந்துள்ளது.
.
சுத்தமான ஆற்றல், பூஜ்ஜிய உமிழ்வு, குறைந்த சத்தம் ஆகியவற்றால் இயக்கப்படுகிறது.
மணிக்கு 250 கிமீ வேகத்தில் பறக்கும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கிமீ தூரம் பறக்கும் ஏர் டாக்ஸில் ஒரே நேரத்தில் 7 பயணிகள் பயணம் செய்யலாம்.
இந்த சேவை விரைவில் புதுவை - சென்னைக்கு இடையில் தொடங்கப்பட உள்ளது.