ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்யும் முறைகள் மற்றும் நாம் செய்யக்கூடாத தவறுகள்
01 Nov,2024
ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்யும் முறைகள் மற்றும் நாம் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் பெரும்பாலான வீடுகளில் ஸ்மார்ட் டிவி என்பது அதிகமாகிவிட்டது. இதனை எவ்வாறு சுத்தம் செய்வது என்பதை பலரும் அறிந்திருக்க மாட்டீர்கள்.
ஆம் சரியான வழிமுறையை நாம் செய்யாவிட்டால், ரிவி பழுதடைய அதிக வாய்ப்புகள் இருக்கின்றது. எனவே சுத்தம் செய்யும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய சில வழிமுறைகளை தெரிந்து கொள்வோம்.
எவ்வாறு சுத்தம் செய்வது?
ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்யும் முன்பு மின் இணைப்பை துண்டித்து, ஆஃப் செய்து கொள்ள வேண்டும். மேலும் பிளக் பாயிண்டையும் நீக்குவது பாதுகாப்பானதாகும். இதனால் மின்சார அதிர்ச்சியை தவிர்க்க முடியும்.
ஸ்மார்ட் டிவி திரையை உங்கள் பலத்தை பிரயோகித்து மிகவும் கடினமாக தேய்க்க வேண்டாம். மென்மையாக சுத்தம் செய்யவும்.
சுத்தம் செய்வதற்கு மென்மையான, உலர்ந்த மைக்ரோஃபைபர் துணியை பயன்படுத்த வேண்டும். வேண்டுமெனில் அதிக ஈரம் இல்லாமல், சிறிதளவு ஈரப்பதத்துடன் துடைத்தால் நல்லது.
டிவியின் பக்கங்கள், போர்ட்களில் தேங்கியிருக்கும் தூசியை அகற்ற ஏர் ப்ளோயரைப் பயன்படுத்தவும்.
திரையில் கரைகள் ஏதும் இருந்தால் இவற்றினை சுத்தம் செய்வதற்கு சானிடைசரை பயன்படுத்தவும் அல்லது ஸ்கிரீன் கிளீனர் இருந்தாலும் பயன்படுத்தலாம்.
ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்ய போறீங்களா... இந்த தப்பை செஞ்சுடாதீங்க... | Smart Tv Cleaning Dos And Donts Tech Tips
செய்யக்கூடாத தவறுகள் என்ன?
தண்ணீர் தெளித்து சுத்தம் செய்வதை தவிர்க்கவும். ஏனெனில் திரையில் ஊடுருவி டிவியை சேதப்படுத்திவிடும்.
கடினமான பிரெஷை பயன்படுத்தி திரையை சுத்தம் செய்ய வேண்டும். திரையில் கீறல் ஏற்பட்டு பிரகாசத்தை குறைத்துவிடும்.
டிவியை துடைப்பதற்கு கடினமான துணிகள் மற்றும் காகித துண்டுகள் இவற்றினை பயன்படுத்த வேண்டாம். இவை திரையில் கீறலை ஏற்படுத்தும்.
டிவி ஸ்க்ரீனை சுத்தம் செய்ய எந்த இரசாயனங்களையும் பயன்படுத்த வேண்டாம். இந்த பொருட்கள் திரையை சேதப்படுத்தும்.