கனடாவில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த டெஸ்லா கார்: 4 இந்தியர்கள் பலி
28 Oct,2024
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் டொரன்டோ நகரில் இந்தியா வம்சாவளியை சேர்ந்த சிலர் கடந்த வியாழன்று டெஸ்லா காரில் சென்று கொண்டு இருந்தனர். திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த தூணில் மோதிய பின்னர் தீப்பிடித்தது.
அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் காரில் சிக்கி தவித்த ஒரு பெண்ணை அவர்கள் மீட்டுள்ளனர். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இந்தியர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயத்துடன் மீட்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.