ஸ்மார்ட் மோதிரத்தை அறிமுகப்படுத்தும் சாம்சங் நிறுவனம் புதிய அப்டேட்
09 Jan,2024
தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், ஸ்மார்ட் மோதிர தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
டேப்லெட், ஸ்மார்ட் தொலைபேசி, ஸ்மார்ட் கைக்காடிகாரம் மற்றும் தொலைக்காட்சி போன்ற பல தொழில்நுட்ப உபகரணங்களை அடுத்து அடுத்தாக வெளியிட்ட சாம்சங் நிறுவனம் எதிர்வரும் 17 ஆம் திகதி ஸ்மார்ட் மோதிரத்தை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும், சில காரணங்கள் நிமித்தம் இந்த மோதிரத்தின் வெளியீடு பிற்போடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட் மோதிரம்
புத்தாண்டில் சாம்சங் நிறுவனம் வெளியிடவுள்ள புதிய தொலைபேசி மற்றும் அதன் புதிய வெளியீடுகளுடன் இந்த மோதிரமும் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் ஸ்மார்ட் மோதிரம் மைக்ரோபிராஸசர் கோடுகளுடன் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சாதாரண மோதிரம் போல் இருக்கும் இந்த ஸ்மார்ட் மோதிரத்தின் மூலம், உடலின் இதயத்துடிப்பு, நடக்கும் வேகம், ரத்த அழுத்தம், உள்ளிட்டவற்றை துல்லியமாக கணிக்க முடியும்.
இந்தத் தகவல்களை குறித்த மோதரத்துடன் இணைக்கபட்டுள்ள கணினி அல்லது ஸ்மார்ட் தொலைபேசி ஊடாக பார்க்க முடியும்.
மருத்துவ ஆலோசனை
சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் மோதிர விற்பனைக்கு மருத்துவ ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நடவடிக்கையை தொடர்ந்து, சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் மோதிரம் வெளியிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.