சியோமியின் துணை நிறுவனமான ரெட்மி, நவம்பர் 29ம் தேதி அன்று ரெட்மி 4 வாட்ச் உட்பட ஆறு புதிய சாதனங்களை விற்பனைக்கு கொண்டு வருகிறது.
இந்த நிகழ்வில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரெட்மி கே70 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகமாகிறது. இதில் ரெட்மி கே70 ரெட்மி கே70இ மற்றும் ரெட்மி கே70 ப்ரோ (Redmi K70 Pro) என 3 மாடல்கள் உள்ளன. இப்போது இந்த ஸ்மார்ட்போன்களோடு ரெட்மி வாட்ச் 4, ரெட்மி புக் 16 - 2024 மற்றும் ரெட்மி பட்ஸ் 5 ப்ரோ ஆகிய மூன்று சாதனங்களும் அறிமுகமாகும் என்று ரெட்மி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரெட்மி வாட்ச் 4, இதற்கு முன்னதாக அறிமுகமான ரெட்மி வாட்ச் 3-ஐ விட பல ஹார்ட்வர் அப்டேட்கள் மற்றும் புதிய அம்சங்களுடன் அறிமுகமாகிறது. இதில் பல வாட்ச் ஸ்ட்ராப்புகள் மற்றும் பல வகையான வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன. சதுர வடிவ டிஸ்ப்ளே உள்ள இதில் ஒரு கருப்பு டயல் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பட்டன் உள்ளது. அதோடு இதயத் துடிப்பு, ஸ்டெப்ஸ், கலோரிஸ் போன்றவற்றை அளவீடு செய்து கண்காணிக்கும் அமைப்பும் உள்ளது.
ரெட்மி புக் 16 (2024) லேப்டாப், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கேமிங் லேப்டாப் ஆகும். இதில் மூன்று யுஎஸ்பி டைப்-ஏ போர்ட்கள், ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது. இதில் 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியம் உள்ளது. ரெட்மி புக் 16 (2024) ரூ. 58,000-க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வரலாம்.
ரெட்மி பட்ஸ் 5 ப்ரோ, ரெட்மி பட்ஸ் 4 ப்ரோவின் அப்டேட்டட் வெர்சன் ஆகும். இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ஏஎன்சி) இருப்பதால் இரைச்சல் இல்லாமல் பாடல்கள் கேட்கவும், கால் பேசவும் முடியும். சியோமி புதிய ப்ரோ மாடலில் அதிக மைக்ரோஃபோன்களைச் சேர்த்துள்ளது.
ரெட்மி கே70 ப்ரோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.67 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. அதோடு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 எம்பி மெயின் கேமராவுடன் டிரிபிள் ரியர் கேமரா யூனிட்டைக் கொண்டுள்ளது. கே70 ப்ரோவில் அட்ரினோ ஜிபியு-உடன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும்.
ரெட்மி கே70இ மாடலில் மீடியாடெக் டைமன்சிட்டி 8300 அல்ட்ரா சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும். இது 1,800 நிட்ஸ் பீக் பிரைட்னஸுடன் 1.5K ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். அதோடு 90 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
ரெட்மி கே7 சீரிஸின் மூன்று மாடல்களும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சியோமியின் ஹைப்பர் ஓஎஸ் மூலம் இயங்குகிறது. இத்தகைய அம்சங்களுடன் கூடிய சாதனங்களை அனைத்தும் ஒரே நாளில் அறிமுகம் செய்யப்படவுள்ளதால் சியோமி பயனர்கள் நவம்பர் 29ம் தேதி எப்போது வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.