வந்தாச்சு அடுத்த அப்டேட். இனி வாட்ஸ்அப்பில் வீடியோ பார்ப்பது எளிது!
08 Nov,2023
வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்டாக அதில் பகிரப்படும் வீடியோக்களை முன்னோக்கியும் பின்னோக்கியும் சென்று பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் பல அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அண்மையில் ஒரே செல்போனில் இரண்டு வாட்ஸ் அப் கணக்குகளை நிர்வகிக்கும் வசதியை வழங்கியது. அதேபோல தன்னுடைய தொடர்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒரு தன்முகப்பு படத்தையும் பட்டியலில் இல்லாதவர்களுக்கு வேறொரு தன்முகப்பு படத்தையும் காண்பிக்கும் வசதியையும் அறிமுகப்படுத்தியது.
அதன்படி தற்போது மற்றொரு அப்டேட்டை வாட்ஸ் அப் நிறுவனம் தந்துள்ளது. பயனர்கள் வாட்ஸ் அப்பில் பகிரப்படும் வீடியோக்களை டபுள் டேப் செய்து பாஸ்வேர்ட் மற்றும் பேக்வேர்டு என முன்னோக்கியும் பின்னோக்கியும் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நீண்ட வீடியோக்களை எளிதில் குறிப்பிட்ட இடத்திலிருந்து பார்க்க முடியும்.
பயனர்கள் வீடியோக்களை சிறப்பாக கட்டுப்படுத்த முடியும். இந்த அம்சம் பயனர்கள் வழங்கும் பரிந்துரைகள் அடிப்படையில் எதிர்காலத்தில் இன்னும் மேம்படுத்தப்படும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்சனில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அம்சம் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு வீடியோக்கள் ஃபார்வர்ட் மற்றும் பேக்வேர்ட் செய்ய முடியும் என்பதால் பயனர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.