ட்விட்டரில் விரைவில் வீடியோ கால் வசதி: எலான் மஸ்க் அறிவிப்பு..!
01 Sep,2023
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார் என்பதும் டிவிட்டர் பைனாளிகளுக்கு தற்போது வருமானம் வரும் வகையில் ஏற்பாடுகள் செய்து உள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் விரைவில் ட்விட்டர் தளம் மூலம் வீடியோ கால் வசதி செய்து கொடுக்கப் போவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மேலும் ட்விட்டர் தளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ கால்கள் செல்லும் வசதி விரைவில் அறிமுகமாக இருப்பதாகவும் இந்த புதிய வசதிக்கு தொலைபேசி எண்கள் தேவையில்லை என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஆண்ட்ராய்டு ஆப்பிள் உள்பட அனைத்து இயங்கு தளங்களிலும் இது செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதி வந்துவிட்டால் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது