அடுத்த வருடம் தொடங்க உள்ள அதன் முதல் கடல் பயணத்தின் போது ஐகான் ஆஃப் தி சீஸ் கப்பல் 2,350 க்ரூ மெம்பர்களையும் 5,610 பயணிகளையும் ஏற்றுச் செல்லும்.
'ஐகான் ஆஃப் தி சீஸ்' (Icon of the Seas) என்று பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய பயணக் கப்பல் ஒரு வழியாக ஜனவரி 2024 ஆம் அன்று முதல் முறையாக பெருங்கடலில் அதன் பயணத்தை துவங்க உள்ளது. சமீபத்தில் இந்த கப்பல் துர்கு மற்றும் பின்லாந்து பெருகடலில் நடத்தப்பட்ட சோதனையில் வெற்றிப் பெற்றது. அதன் முதல் பயணத்தை அடுத்த வருடம் தொடங்க உள்ள இந்த அசுர கப்பலில் மேயர் துர்கு சிப்யார்டில் ஒரு சில பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
ஐகான் ஆஃப் தி சீஸ்:
அறிக்கைகளின் படி, உலகின் மிகப்பெரிய இந்த கப்பல் ஜனவரி 27, 2024 அன்று கிழக்கு மற்றும் மேற்கு கரீபியன் பெருங்கடலில் முதன் முதலாக புறப்படும். மியாமியில் இருந்து அதன் சேவையைத் தொடங்கும்.
ஐகான் ஆஃப் தி சீஸ் கொள்ளளவு மற்றும் பரிணாமங்கள்
இதுவரை கட்டப்பட்டுள்ள கப்பல்களில் ஐகான் ஆஃப் தி சீஸ் கப்பல் மிகப்பெரியது என்று சொல்லப்படுகிறது. அதன் அளவைப் பற்றி பேசுகையில் இந்த கப்பல் 1,200 அடி (365 மீட்டர்) நீளத்தையும் 250,800 டன்கள் எடையும் கொண்டது.
அடுத்த வருடம் தொடங்க உள்ள அதன் முதல் கடல் பயணத்தின் போது ஐகான் ஆஃப் தி சீஸ் கப்பல் 2,350 க்ரூ மெம்பர்களையும் 5,610 பயணிகளையும் ஏற்றுச் செல்லும். இது அதன் உண்மையான கெப்பாசிட்டியை காட்டிலும் குறைவான எண்ணிக்கை ஆகும் என்று மீடியா தரப்பு சொல்கிறது. அந்த கப்பலில் மொத்தமாக 7,960 பயணிகள் பயணம் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.
பயணத்தின் போது ஐகான் ஆஃப் தி சீஸ் கப்பலில் கிடைக்கும் வசதிகள்:
மிகப்பெரியதாகவும் அதிக எடை கொண்டதாகவும் இருப்பதை தவிர 20 டெகுகள் கொண்ட இந்த கப்பலில் வாட்டர் பார்க், ஃபேமிலி ஏரியா, மாடர்ன் நீச்சல்குளம், டோம் பகுதி, அக்குவா தியேட்டர், இன்ஃபினிட்டி பூல் ஏரியா கொண்ட ஸ்விம் அப் பார் உட்பட எக்கச்சக்கமான சொகுசு வசதிகளை கொண்டுள்ளது.
அதோடு பயணிகளுக்கு 220 டிகிரி வியூ தரக்கூடிய மிகப்பெரிய ஃப்ளோர்-ஃப்ளோர் சீலிங் விண்டோவும் இந்த கப்பலில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இதுவரை எந்த கப்பலிலும் இல்லாத அளவுக்கு ஆறு வாட்டர் ஸ்லைடுகள், ஏழு நீச்சல் குளம் உள்ளன
ஐகான் ஆஃப் தி சீஸ் கப்பலில் தங்கும் வசதி:
இந்த கப்பலில் பயணிக்கும் பயணிகளுக்கு பல சொகுசு அறைகள் உள்ளன. குறிப்பாக இந்த கப்பலில் இருக்கக்கூடிய 82% அறைகளில் இரண்டு முதல் மூன்று விருந்தாளிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு அறையுமே அற்புதமான பால்கனி வியூ கொண்டுள்ளது. இதன் மூலமாக கடலின் அழகை பயணம் முழுவதும் ரசித்தவாறே பயணிகள் பயணிக்கலாம்.
இந்தக் கப்பலில் பயணிப்பதற்கான டிக்கெட் செலவு என்ன?
விலையைப் பொறுத்தவரை ஒரு நபருக்கு $1,703 (தோராயமாக ரூ. 1,39,707) முதல் தொடங்குகிறது.