வாட்ஸ்-அப் செயலியில் தடங்கல் நிலை..!
25 Oct,2022
இலங்கை, இந்தியா உட்பட்ட பல நாடுகளில் வாட்ஸ்-அப் செயலியில் தடங்கல் நிலை ஏற்பட்டிருந்தது.
அதற்கான காரணம் கண்டு பிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டு மீளவும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் வைபர் "12 ஆண்டுகளுக்கு நிலையானது" என்று தமது உத்தியோக பூர்வ முகநூல் தளத்தில் பதிவிட்டுள்ளது.
"தடங்கல் ஏற்பட்டமைக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே இவ்வாறு வைபர் பதிவிட்டுள்ளது" என்று பயனாளர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
வாட்ஸ்-அப் செயலியின் மத்திய பரிமாற்ற கட்டமைப்பில் (server-side) ஏற்பட்ட தொழினுட்ப பிரச்சினையே இதற்கு காரணம் என மெட்டாவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த பாதிப்பை சரிசெய்து வாட்ஸ்-அப் மீளமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“சிலருக்கு தற்போது செய்திகளை அனுப்புவதில் சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம், முடிந்தவரை விரைவாக வாட்ஸ்-அப் ஐ மீட்டெடுக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க அதிகாரிகள், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள், பல சந்தைகள் மற்றும் பில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்-அப் ஒரு முக்கியமான உள்கட்டமைப்பாக மாறியுள்ளது.
2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஒரு நாளைக்கு 100 பில்லியனுக்கும் அதிகமான செய்திகளை அனுப்ப இந்த சேவை பயன்படுத்தப்பட்டது,
Facebook Messenger மற்றும் வாட்ஸ்-அப் இணைந்து 2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு நாளைக்கு 60 பில்லியன் செய்திகளைப் பரிமாறிக் கொண்டன.
ஆனால் குறிப்பிட்ட புள்ளிவிவரங்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்று அப்பிள் தலைமை நிர்வாகி டிம் குக் கடந்த 2020 ஆம் ஆண்டளவில் குற்றம் சுமத்தியிருந்தார்.
கடைசியாக அப்பிள் இந்த எண்ணிக்கையைப் பகிர்ந்து கொண்டது. அது வாட்ஸ்-அப்பின் அப்போதைய பயன்பாட்டில் (podcast) மிகவும் பின்தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.