எலான் மஸ்க் நிறுவனம் சார்பில் மனித வடிவிலான நவீன ரோபோ அறிமுகம்
                  
                     01 Oct,2022
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	ஆப்டிமஸ் என பெயரிடப்பட்டுள்ள ரோபாவின் இந்திய மதிப்பு ரூ.16 லட்சம் ஆகும். மலிவான விலையில் அதிக திறன் கொண்ட ரோபோ தயாரிப்பது தான் எனது கனவு. அது இப்போது நனவாகி இருக்கிறது என்று எலான் மஸ்க் தெரிவித்தார். கலிபோர்னியா: எலான் மஸ்க்கை தலைவராக கொண்ட பிரபல டெஸ்லா நிறுவனம் சார்பில் மனித வடிவிலான அதி நவீன ரோபோ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
	 
	 கலிபோர்னியாவில் நடந்த ஒரு கண்காட்சியில் எலான் மஸ்க் இந்த ரோபோவை அறிமுகப்படுத்தினார். அப்போது அந்த ரோபோ பார்வையாளர்களை பார்த்து கைகளை அசைத்தது. இந்த ரோபோவுக்கு ஆப்டிமஸ் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.16 லட்சம் ஆகும். அறிமுக நிகழ்ச்சியில் பேசிய எலான் மஸ்க், மலிவான விலையில் அதிக திறன் கொண்ட ரோபோ தயாரிப்பது தான் எனது கனவு. அது இப்போது நனவாகி இருக்கிறது என்று தெரிவித்தார்.