தற்போதைய காலத்தில் பணிக்குச் சென்று கைநிறைய சம்பாதிப்பவர்களை விட வீட்டிலிருந்தபடியே சமூக வலைதளமான, யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவை மூலமாக பை நிறைய சம்பாதிப்பவர்கள் தான் அதிகரித்து வருகின்றனர்.
இதை பார்த்து சிலர் நாமும் யூடியுப் கணக்கை உருவாக்கி, பணம் சம்பாதிக்கலாம் என நினைக்கின்றனர். அதை சரியாக பயன்படுத்தியவர்கள் வெற்றி அடைகின்றனர். அதுகுறித்த முழுவிவரம் தெரியாமல் தொடங்கிய சிலர், ஏமாற்றமடைகின்றனர். ஏனென்றால் முதலில், யூடியூப் கணக்கை தொடங்கும் முன் அதுகுறித்த முழு விவரங்களையும் தெரிந்துகொண்டு தொடங்கவேண்டும், அதற்கு முதலில் யூடியூப் கணக்கை எப்படி தொடங்குவது என்று பார்ப்போம்...
முதலில், கூகுள் அக்கவுன்ட் தொடங்கவேண்டியது அவசியம். ஜிமெயில், (Gmail) அக்கவுண்ட் தொடங்கிய பின்பு www.youtube.com என்கின்ற இணைய முகவரிக்கு அல்லது ஆப் மூலமாக சென்று யூடியூப் சேனலை உருவாக்கிக்கொள்ள வேண்டும். யூடியூப் சேனலில் youtube account settings-ஐ க்ளிக் செய்தால் Create a New Channel என்று வரும். அதை க்ளிக் செய்து நீங்கள் உங்கள் சேனலுக்கு ஏற்றவாறு ஒரு பெயரை வைத்துக் கொள்ளலாம்.
மேலும் யூடியூப் வீடியோக்களுக்கு ஸ்டாண்டர்ட் லைசென்ஸ், கிரியேட்டிவ் காமன் லைசென்ஸ் (Standard License, Creative Common License) என இரண்டு விதமான லைசென்ஸ் உண்டு.
ஸ்டாண்டர்ட் லைசென்ஸ், என்பது நாம் பதிவேற்றும் அனைத்து வீடியோக்களும் நம்முடைய சொந்த வீடியோக்களாக இருக்கவேண்டும். பிறரின் அனுமதி இல்லாமல் அவருடைய வீடியோக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்ற வீடியோக்களை நம்முடைய யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யக்கூடாது.
யூடியூபில் நாம் இலவசமாக எடுத்து பயன்படுத்திக் கொள்ள ஏராளம் வீடியோக்கள் இருக்கின்றது இதற்கு கிரியேட்டிவ் காமன் லைசென்ஸ் என்று கூறுவார்கள். இவ்வகை வீடியோக்களை நீங்கள் உங்களுடைய சேனலில் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் அதாவது, கிரியேட்டிவ் காமன் லைசென்ஸ் வீடியோ ஒன்றை எடுத்து அதில் சில மாற்றங்களை செய்து உங்களுடைய யூடியூப் சேனலில் அப்லோட் செய்து கொள்ளலாம். அதேபோன்று கிரியேட்டிவ் காமன் லைசென்ஸ் முறையில் நீங்கள் உங்களுடைய சேனலில் ஒரு வீடியோவை அப்லோட் செய்தால் அதை பிறர் இலவசமாக டவுன்லோட் செய்து அவருடைய யூடியூப் சேனலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
யூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?
விளம்பரம் மூலம் வரும் வருமானத்தில் 45 சதவிகிதத்தை யூடியூப் நிறுவனம் எடுத்துக்கொள்ளும். மீதமுள்ள 55 சதவிகிதம் வீடியோவை பதிவேற்றிய சேனலுக்குக் கிடைக்கும். மேலும் நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது “மானிடைசேஷன்”(“Monetization”) “Monetization” என்பது நமது சேனலை யூடுயூப் (youtube) நிறுவனத்தார் ஆய்வு செய்து நமது சேனலை அங்கீகரிப்பது எனலாம். இந்த ஆப்ஷனை தேர்தெடுத்து நீங்கள் விண்ணப்பிக்கலாம். உங்களுடைய சேனலின் view எண்ணிக்கை 10000 த்தை கடந்தவுடன் உங்கள் சேனல் ஆய்வு செய்யப்படும்.
யூடியூப் சேனலை இலவசமாக ஆரம்பித்து விடலாம் என்றாலும் அதில் விளம்பரங்கள் வந்தால்தான் நமக்கு வருமானம் கிடைக்கும். வருமானம் பொருத்தவரைக்கும் கூகுளின் AdSense மூலம் வரும்.
என்னென்ன தேவை?
யூடியூபில் வருமானம் கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் யூடியூப் பார்ட்னர் புரொக்ராமின் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் அதாவது உங்களுடைய யூடியூப் சேனல் ஆரம்பித்து கடந்த ஒரு வருடத்தில் உங்கள் சேனல் 4,000 மணி நேரம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் பயனர்களின் பார்வைகளை அடிப்படையில் தான் யுடியூப் நமக்கு அதற்கான தொகையை தருகின்றது.
பொதுவாக, 1000 Subscribers சேனலுக்கு இருக்க வேண்டும் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் யூடியூப் நிறுவனம் உங்கள் சேனலை ஆய்வுசெய்து, பின்னர் தனது யூடியூப் பார்ட்னர் புரொக்ராமின் கீழ் இணைத்துக்கொள்ளும் அதற்கு பிறகு பேமென்ட் உள்ளிட்ட அம்சங்கள் உங்களுக்கு கிடைக்கும்.