காலாவதியான காஸ் சிலிண்டரை கண்டறிவது எப்படி?கொஞ்சம் இதையும் கட்டாயம் கவனிங்க
11 Jul,2022
காலாவதியான சிலிண்டரில் காஸ் நிரப்பியதுதான் முழுக் காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிலிண்டர்களை பரிசோதனை செய்யாமல் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, காஸ் சிலிண்டர் குறித்த விழிப்புணர்வு பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்ற நிலைதான் உள்ளது.சிலிண்டர் காலியாகும் முன்பே முன்பதிவு செய்கிறோம். வீட்டுக்கு சிலிண்டர் வந்ததும், சிலிண்டரின் காலாவதி தேதியைப் பார்த்து வாங்குவதில்லை. காலாவதியான சிலிண்டர் கூட வெடிக்க கூடியது என்பது பலருக்கும் தெரிவதில்லை.
இதர பொருட்களைப் போலவே, சிலிண்டருக்கும் காலாவதி உண்டு. காலியாக உள்ள சிலிண்டராலும் ஆபத்து நேரிடலாம். பொதுவாகவே ஒரு சிலிண்டரின் பயன்பாட்டு கால அளவு, 10 ஆண்டுகள்தான்.சிலிண்டர் இரும்பினால் ஆனது. கந்தக அமிலத்தை ஊற்றினால் இரும்பு அரிக்கப்பட்டுவிடும். அதே தன்மை சமையல் எரிவாயுவுக்கும் இருப்பதால், குறிப்பிட்ட இடைவெளியில், காலாவதியான சிலிண்டரை உருக்கி, மறுசுழற்சி செய்கின்றனர்.
எப்படி கண்டுபிடிப்பது?
சிலிண்டரில் மேற்பகுதியில், பட்டையான மூன்று கம்பிகள் இருக்கும். அதில் ஒன்றில், சிலிண்டரின் எடை குறிப்பிடப்பட்டிருக்கும்.மற்றொன்றில் காலாவதி தேதி குறித்த விவரம் சுருக்கமாக இருக்கும். அதில், ஏ, பி, சி, டி என ஆங்கில எழுத்துகள் இடம்பெற்றிருக்கும்.ஏ - ஜன., முதல் மார்ச் வரைபி - ஏப்., முதல் ஜூன் வரைசி - ஜூலை முதல் செப்., வரைடி - அக்., முதல் டிச., வரை
உதாரணமாக உங்கள் சிலிண்டரில் டி22 என்று இருந்தால், 2022 டிசம்பருடன் அது காலாவதியாகும் என்று பொருள். பி-23 என்றிருந்தால் ஜூன் 2023 உடன் அந்த சிலிண்டர் காலாவதி ஆகிவிடும் என்று பொருள். காலாவதியான தேதிக்கு மேல் அந்த சிலிண்டரை பயன்படுத்தக் கூடாது. இனி உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் வரும்போது காலாவதி தேதியை ஒரு முறை சரிபார்த்துவிடுங்கள்.