ஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை
09 Jun,2022
தொழிற்சங்க முயற்சிகளின் எழுச்சி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தை எதிர்கொள்வதால் ஆப்பிள் தனது மணிநேர அமெரிக்க ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தியுள்ளது. மேலும் படிக்க தொழிற்சங்கமயமாக்கலை நோக்கிய உந்துதலுக்கு மத்தியில் ஆப்பிள் நிறுவனம் சில்லறை ஊழியர்களுக்கான பணி அட்டவணையை மாற்றி உள்ளது.
வரவிருக்கும் மாதங்களில் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் என்று ஊழியர்களிடம் அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும் ஷிப்டுகளுக்கு இடையிலான குறைந்தபட்ச நேரத்தை 10 மணிநேரத்திலிருந்து 12 மணிநேரமாக நீட்டிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம், ஐபோன் தயாரிப்பாளர் ராய்ட்டர்ஸிடம் தனது அமெரிக்க ஊழியர்களுக்கான ஊதியத்தை ஒரு மணி நேரத்திற்கு 22 டாலர். அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக
ரூ. 1,700 அல்லது அதற்கும் அதிகமாக உயர்த்துவதாகத் தெரிவித்திருந்தது. தொழிற்சங்க முயற்சிகளின் எழுச்சி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தை எதிர்கொள்வதால் ஆப்பிள் தனது மணிநேர அமெரிக்க ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தியுள்ளது. அமெரிக்காவின் மணிநேர ஊழியர்களுக்கான ஆரம்ப ஊதியம் 22 டாலர் ஆக (தோராயமாக ரூ. 1,700) உயரும் என கூறப்படுகிறது. இது 2018 இல் இருந்ததை விட 45 சதவீதம் அதிகமாகும் என்று ஆப்பிள் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.