டுவிட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க்..!
04 Apr,2022
கடந்த சில தினங்களு்கு முன்பு எலான் மஸ்க் டுவிட்டரில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினார். அதில், "ஜனநாயகம் செயலாற்ற பேச்சு சுதந்திரம் தேவை. டுவிட்டர் இந்தக் கொள்கையை கடைப்பிடிக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்களா" என கேள்வி கேட்டு இருந்தார்.
அதற்கு 70 சதவீத வாக்குகள் இல்லை என பதிவாகியிருந்தது. இதனால் மஸ்க் புதிய சமூக வலைதளத்தை உருவாக்க முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியது. இதுகுறித்து பதிலளித்த எலான் மஸ்க், தீவிரமாக பரிசீலித்து வருவதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் எலான் மஸ்க் டுவிட்டரின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார். அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையத்திற்கு அவர் அளித்த தகவலின்படி தற்போது 7 கோடியே 34 லட்சம் டுவிட்டர் பங்குகள் அவரிடம் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் எலான் மஸ்க் டுவிட்டரின் மிகப்பெரிய பங்குதாரராக மாறியுள்ளார்.