அமேசான் அதிபரின் விண்வெளி நிலையம்
01 Nov,2021
அடுத்த 10 ஆண்டுகளில், சர்வதேச விண்வெளி நிலையம் ஓய்வு பெற்றுவிடும். ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் கூட்டு முயற்சியான அந்த ஆய்வு நிலையம் விட்டுச் செல்லும் இடத்தைப் பிடிக்க, அமேசான் அதிபர் ஜெப் பெசோஸ் திட்டமிடுகிறார்.
வரும் 2030க்குள் அவரது புளூ ஆரிஜின் என்ற விண்வெளி நிறுவனம், ஆர்பிட்டல் ரீப் என்ற வர்த்தக விண்வெளி ஆய்வு நிலையத்தை நிறுவிவிடும் என்று அறிவித்துள்ளது. இந்த முயற்சிக்கு, போயிங் உட்பட பல பெரிய தொழில்நிறுவனங்கள் ஆதரவு தரப்போவதாக பெசோஸ் அண்மையில் அறிவித்தார்.
ஆர்பிட்டல் ரீப் பல பயன்கள் கொண்டதாக இருக்கும். அது ஒரு தொழிற் பூங்காவாகவும், ஆய்வகமாகவும், நிலா, செவ்வாய் போன்ற கோள்களுக்கு போக விரும்பும் விண்வெளி வீரர்களுக்கான தங்குமிடமாகவும் இருக்கும்.
இந்த மையம் செயல்பட துவங்கியதும் விண்வெளியில் ஒரு சுறுசுறுப்பான பொருளாதாரமே உருவாகிவிடும் என்கிறார் பெசோஸ். அவர் சொன்னால், அதைச் செய்யக்கூடியவர் தான்.