, உலகின் 150 முக்கிய நகரங்களின் நடத்தப்பட்ட பகுப்பாய்வின் அடிப்படையில், எந்த உலக நகரத்தில் அதிகப்படியான CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது என்ற கணக்கெடுப்பு சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் உலகின் மிக முக்கியமான நகரங்களான ஷாங்காய், நியூயார்க் மற்றும் லண்டன் போன்ற நகரங்களும் இடம்பெற்றுள்ளது. ஆனால், இந்த அனைத்து நகரங்களையும் இந்தியாவின் முக்கியமான நகரம் பின்னுக்கு தள்ளியுள்ளது. இது எந்த இந்திய நகரம் என்று தெரியுமா? கடைசி வாய்ப்பு முந்துங்கள்! சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் சிறப்பு சலுகைகளைப் பெற இப்போதே விசாரியுங்கள்!
ஒரு சதுர மைலுக்கு அதிக கேமராக்கள் கொண்ட ஒரே நகரம் இது தானா? இந்த சமீபத்திய கணக்கெடுப்பின் படி, டெல்லி ஒரு சதுர மைலுக்கு அதிக கேமராக்கள் பொருத்தப்பட்ட மிகவும் பாதுகாப்பான கண்காணிப்பு நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் இடத்தில் உள்ளது. உலகின் 150 நகரங்களின் பகுப்பாய்வின் அடிப்படையில், டெல்லி பொது இடங்களில் அதிக சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் தரவுகளின்படி,
டெல்லியில் ஒரு சதுர மைலுக்கு மொத்தம் 1,826.6 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. 2 மணி நேரம் தாமதமாக வந்த ரயில்.. 2035 பயணிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.! IRCTC கொடுத்த இழப்பீடு எவ்வளவு தெரியுமா? தமிழ்நாட்டில் உள்ள சென்னை நகரத்திற்கு எந்த இடம்? இந்தியாவில் டெல்லி தவிர, தமிழ்நாட்டில் உள்ள சென்னை நகரமும் இந்த கணக்கெடுப்பின் போது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் மட்டும் ஒரு சதுர மைலுக்கு சுமார் 609.9 கேமராக்களுடன் இருக்கும் அதிக CCTV கேமராக்கள் பொருத்தப்பட்ட நகரத்தின் பட்டியலில்
சென்னை 3வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஒரு சதுர மைலுக்கு சுமார் 157.4 கேமராக்களுடன் மும்பை 18வது இடத்தைப் பிடித்துள்ளது என்று ஃபோர்ப்ஸ் அறிக்கை தகவல் தெரிவிக்கிறது. சீனாவின் மிகமுக்கியமான நகரங்களை பின்னுக்கு தள்ளிய டெல்லி இந்தியாவின் டெல்லி நகரம், சீனாவின் மிகமுக்கியமான நகரங்களான ஷென்சென், வூக்ஸி, கிங்டாவோ, ஷாங்காய் போன்ற பல சீன நகரங்களை விஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஃபோர்ப்ஸ் கணக்கெடுப்பின் படி ஷென்சென் நகரத்தில் ஒரு சதுர மைலுக்கு சுமார் 520.1 சிசிடிவி கேமராகள் உள்ளது.
அதேபோல், சீனாவின் வூக்ஸி நகரத்தில் ஒரு சதுர மைலுக்கு சுமார் 472.7 CCTV கேமராக்கள் உள்ளது. சீனாவின் கிங்டாவோவில் ஒரு சதுர மைலுக்கு 415.8 கேமராக்களும், ஷாங்காய் நகரத்தில் ஒரு சதுர மைலுக்கு 408.5 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. வெடித்து சிதறிய சாம்சங் ஸ்மார்ட்போன்: அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்.! லண்டன், சிங்கப்பூர், நியூயார்க்கையும் வென்றதா இந்தியா? மேற்கூறிய பிரிவின் கீழ் உலகின் மிகவும் புகழ்பெற்ற முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலாத்தலமாகச் செயல்படும் லண்டன், சிங்கப்பூர், நியூயார்க் மற்றும் மாஸ்கோ ஆகிய இடங்களையும் டெல்லி முந்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் நகரத்தில் ஒரு சதுர மைலுக்கு சுமார் 1,138.5 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்று அறிக்கை தகவல் தெரிவிக்கிறது. மிக முக்கியமான சுற்றுலாத்தலமாகக் கருதப்படும் சிங்கப்பூர் நகரத்தில் ஒரு சதுர மைலுக்கு 387.6 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பு காட்டுகிறது. நியூயார்க் நகரத்தில் ஒரு சதுர மைலுக்கு எத்தனை கேமராக்கள் உள்ளது? அதேபோல், அமெரிக்காவின் முக்கியமான நகரமான நியூயார்க் நகரத்தைக் கூட இந்தியாவின் டெல்லி நகரம் வென்றுள்ளது.
கணக்கெடுப்பின் படி, நியூயார்க் நகரத்தில் ஒரு சதுர மைலுக்கு சுமார் 193.7 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பு காட்டுகிறது. இதேபோல், மாஸ்கோ நகரத்தையும் டெல்வி வென்றுள்ளது. கணக்கெடுப்பின் படி, மாஸ்க்கோவில் ஒரு சதுர மைலுக்கு சுமார் 210 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. உலக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எச்சரிக்கை.. இந்த 8 ஆப்ஸ்கள் உங்கள் பணத்தை சுரண்டக்கூடும்.. உடனே டெலீட் செய்யுங்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதுபற்றி என்ன கூறினார்? டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில்,
"ஷாங்காய், நியூயார்க் மற்றும் லண்டன் போன்ற முக்கிய நகரங்களைச் சதுர மைலுக்கு அதிக சிசிடிவி கேமராக்கள் கொண்டதன் மூலம் டெல்லி வீழ்த்தியுள்ளது என்று சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன் " என்றார். கேமரா நிறுவல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளை முதல்வர் கெஜ்ரிவால் பாராட்டினார்.மேலும், கேமரா நிறுவல் மிஷனில் பணியாற்றிய எங்கள் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.