சுமார் 20 லட்சம் அக்கவுண்ட்களை முடக்கிய வாட்ஸ்அப்
16 Jul,2021
வாட்ஸ்அப் நிறுவனம் மே 15 முதல் ஜூன் 15, 2021 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 20 லட்சம் அக்கவுண்ட்களை முடக்கி இருப்பதாக தெரிவித்து உள்ளது. தவறு நடக்கும் முன் நடவடிக்கை எடுக்கும் முயற்சியாக இவ்வாறு செய்யப்பட்டது என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின் படி வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 20 லட்சத்து 11 ஆயிரம் அக்கவுண்ட்கள் முடக்கப்பட்டு இருக்கிறது,' என குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், 'உலகளவில் ஒப்பிடும் போது இந்தியாவில் மட்டும் 25 சதவீத அக்கவுண்ட்கள் முடக்கப்பட்டு இருக்கிறது. தேவையற்ற அல்லது தவறு நடக்க காரணமாக அமையும் குறுந்தகவல்கள் பகிரப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே எங்களின் முக்கிய நோக்கம்,' என அந்நிறுவனம் தெரிவித்தது.
விதிகளை மீறி அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் குறுந்தகவல்களை அனுப்பும் அக்கவுண்ட்களை கண்டறிய அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
: