உங்கள் ஆதார் எண்ணில் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் கண்டுபிடிக்க
15 Jun,2021
சந்தாதாரர்களுக்கு தொலைதொடர்பு வசதிகளை முறையாக செய்துக் கொடுப்பதை உறுதி செய்வதில் தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் (Department of Telecommunications (DoT)) உறுதியாக இருக்கிறது. அதோடு, மோசடிகளைக் குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் DoT மேற்கொண்டுள்ளது.
தற்போதுள்ள சட்டங்களின்படி, ஒருவர் தனது பெயரில் ஒன்பது மொபைல் இணைப்புகளை பதிவு செய்யலாம். அதாவது, தனிப்பட்ட மொபைல் சந்தாதாரர்கள் தங்கள் ஆதார் எண்ணைக் கொடுத்து ஒன்பது மொபைல் இணைப்புகளை வாங்கலாம்.
இதைப் பயன்படுத்தி, மோசடிக்காரர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டலாம். ஆதார் எண்ணின் அடிப்படையில் கொடுப்பதால், மொபைல் எண்களை வாங்குவது சுலபமாகவும் இருக்கிறது. மோசடிக்காரர்கள் நமது தரவுகளை தவறாக பயன்படுத்தாமல் தடுக்க DoT நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
சந்தாதாரர்களுக்கு உதவவும், அவர்களின் பெயரில் இயங்கும் மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கையை சரிபார்க்கவும், அவற்றின் கூடுதல் மொபைல் இணைப்புகள் ஏதேனும் இருந்தால் அவற்றை முறைப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கவும் வலைத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
உங்கள் பெயரில் உங்கள் ஆதார் எண்ணைக் கொடுத்து வாங்கப்பட்ட அனைத்து சிம் கார்டுகளின் விவரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம். அவற்றில் உங்களுக்குத் தெரியாமல் உங்கள் ஆதார் எண்ணைத் திருட்டுத்தனமாகப் பயன்படுத்தி ஏதாவது சிம் கார்டு வாங்கியிருந்தால் அதை ரத்து செய்யலாம்.
tafcop.dgtelecom.gov.in என்ற தளத்தை உங்கள் மொபைலில் திறந்து உங்கள் மொபைல் எண்ணைத் தட்டச்சு செய்யவும். வரும் OTP ஐ உள்ளிட்டவுடன் உங்கள் ஆதார் எண்ணுடன் இணைந்துள்ள அனைத்து சிம் கார்டுகளின் எண்களையும் தெரிந்துக் கொள்ளலாம். அவற்றில் எதை வேண்டுமானாலும் நீங்கள் ரத்து செய்யலாம்.