மனிதர்களும் பறக்கலாம்”
07 Jun,2021
ஆஸ்திரேலியாவில் “காப்டர் பேக்” என்ற,மனிதர்கள் பறக்க உதவும் சாதனம் தயாரிக்கப்பட்டுள்ளன.அதாவது,ஹெலிகாப்டரில் பயன்படுத்தப்படும் மோட்டார் மற்றும் விசிறி போன்ற ரோட்டார் அமைப்புகள் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இவை ஒரு பேக் போன்று முதுகில் பொருத்தப்பட்டு,அதன்மூலம்,ஒரு குறிப்பிட்ட உயரத்தில் பறக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல்,ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு ஹெலிகாப்டர் கீழே விழும் நிலை ஏற்பட்டால்,காப்டர் பேக்கிலிருக்கும் பாராசூட் உடனடியாக விரிந்து உயிரை காப்பாற்றும் வகையில் கார்பன் ஃபைபர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து,கடந்த சில ஆண்டுகளாக அவற்றின் பறக்கும் திறன் குறித்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில்,ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு கடற்கரைப் பகுதியில்,நடத்தப்பட்ட “காப்டர் பேக்” சோதனை முயற்சி வெற்றியடைந்துள்ளது.
அதாவது,சோதனையின்போது,காப்டர் பேக்கை இயக்கியவரை அந்த சாதனம் குறிப்பிட்ட உயரத்திற்கு பறக்கச் செய்தது.