புகையில்லா பேருந்து அறிமுகம் - சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு
09 Apr,2021
வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகையால் காற்று மாசு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. டெல்லி, சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் காற்று மாசுவுக்கு காரணம், வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகைதான் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி நாடு முழுவதும் சுற்றுச் சூழல் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையை கட்டுப்படுத்த பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் நிறுவனங்கள் நவீன இஞ்சின்கள் தயாரித்து வருகிறது.
அந்த வகையில் அசோக் லேலன்ட் நிறுவத்தின் சார்பில் பாரத் ஸ்டேஜ் 6 என்ற மாடலில் புகையை வெளியிடாத வாறு தொழில்நுட்ப வசதியில் பேருந்து இன்ஜினை தயாரித்து உள்ளது. சாதாரணமாக பேருந்து இன்ஜின் சேஸ் தயாரிப்பதற்கு ரூ 19 லட்சம் செலவாகும். ஆனால் இந்த புகையில்லா இஞ்சின் பேருந்து சேஸ் விலை ரூ 26 லட்சம் ஆகும் இதில் உள்ள சிறப்பு என்பது மற்ற வாகனங்களில் இருப்பது போல இந்த வாகனத்திற்கு புகைபோக்கி உள்ளது.
ஆனால் பார்வையில் தெரியாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது மேலும் மற்ற வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசு ஏற்படுத்தும் நச்சுப் புகையை வெறியேற்றுகிறது . ஆனால் இந்த பேருந்தில் புகையை வெளியேற்றாதவாறு இன்ஜினுடன் இணைக்கப்பட்ட ஆட் பூளு ஆயில் தனி திரவம் செயல்பாட்டினால் டீசல் எரிந்து வரும் குறைந்தளவு புகையும் இந்த திரவ ஆயில் மூலம் கட்டுபடுத்தபடுவதால் புகை வெளியேறுவது தடுக்கப்படுகிறது மற்ற அரசு மற்றும் தனியார் பயணிகள் பேருந்துகளை போல் அல்லாமல் மாறுபட்டு சுற்றுச்சூழல் மாசு பாதிப்பு இல்லாமல் பயணிகளை சொகுசாக ஏற்றிச் செல்லும் வசதிகள் உள்ளதால் சிறப்பு பேருந்து என்ற பெயரும் பெற்றுள்ளது. தேவகோட்டையில் இருந்து காரைக்குடி வழியாக தினமும் இயக்கப்படும் இந்த தனியார் பயணிகள் பேருந்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.