போயிங் 747 கார்கோ விமானம் நடுவானில் பறந்தபோது சிதறி விழுந்த என்ஜின் பாகங்கள்
22 Feb,2021
சனிக்கிழமை இரண்டு பெரிய விமான விபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. இரண்டு விமான விபத்துகளும் என்ஜின் கோளாறால் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்வரிவில் யுனைட் ஏர்லைசின் போயிங் 777 விமானத்தின் என்ஜின் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அன்றைய தினம் நெதர்லாந்தின் மாஸ்ட்ரிச்ட்டில் இருந்து நியூயார்க்கிற்கு போயின் 747-400 என்ற கார்கோ விமானம் புறப்பட்டது. இது பெர்முடாவில் பதிவு செய்யப்பட்ட விமானம். விமானம் புறப்பட்டதும், மீர்ஸ்சென் என்ற நகரத்தின் மீது விமானம் பறக்கும்போது என்ஜின் பாகங்கள் சிறுசிறு துண்டாக கீழே விழுந்தது.
விமான என்ஜின் துண்டுகள் விழுந்ததில் ஒரு பெண் காயம் அடைந்தார். பல வீடுகள் செதம் அடைந்துள்ளன. அந்த விமானத்தில் பிராட் அண்ட் விட்னி 4000-112 என்ஜின்கள் பொறுத்தப்பட்டிருந்தன.
ஒவ்வொரு துண்டுகளும் 4 செ.மீ்ட்டர் அகலமும், 25 செ.மீட்டர் நீளமும் கொண்டதாக இருந்துள்ளது. விமானம் 30 கி.மீட்டர் தொலைவில் பெல்ஜியத்தில் உள்ள லியேஜ் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்ற வருகிறது.