ஸ்பேஸ் எக்ஸ்' ராக்கெட் வெடித்து சிதறியது
04 Feb,2021
ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் செவ்வாய்க்கு செல்லும் 'ஸ்டார்ஷிப்' ராக்கெட் நேற்றைய சோதனை முயற்சியில் வெடித்து சிதறியது.
விண்வெளி துறையில் பல சாதனைகளை அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. இது செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் மற்றும் 100 டன் எடையுள்ள சரக்குகளை ஏந்தி செல்வதற்கு ஏற்ற 'ஸ்டார்ஷிப்' ராக்கெட்டை தயாரித்துள்ளது. இதற்கான முதல் சோதனை ஓட்டம் 2020 டிச. 9ல் நடந்த போது 'எஸ்.என்.8' என்ற ராக்கெட் வெடித்துச் சிதறியது. இது விண்ணுக்கு சென்று மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையை சேர்ந்தது.
இதையடுத்து தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு 'எஸ்.என்.9' ராக்கெட் தயாரிக்கப்பட்டது. இதன் உயரம் 394 அடி. விட்டம் 30 அடி. இது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போகா சிகா ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. ஆனால் 10 கி.மீ., உயரம் பறந்த இந்த ராக்கெட், ஏவப்பட்ட 6 நிமிடம், 26 வினாடிகளில் மீண்டும் வெடித்துச் சிதறியது. இதனால் எலன் மஸ்க்கின் கனவு திட்டத்தக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.