கூகுள் புதிய ஸ்மார்ட்போன் செயலியான லுக் டூ ஸ்பீக் பயன்பாட்டை சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பயன்பாட்டை கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம்.
லுக் டூ ஸ்பீக் ஆண்ட்ராய்டு செயலி
கூகுள் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனான பயன்பாடான லுக் டூ ஸ்பீக் தற்போது சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது. இது பயனர்கள் முன்பே எழுதப்பட்ட சொற்களை சத்தமாக உச்சரிக்க கண்களை பயன்படுத்த உதவுகிறது. லுக் டூ ஸ்பீக் செயலி ஆண்ட்ராய்டு பயன்பாட்டிற்காக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியானது ஆண்ட்ராய்டு 9 மற்றும் அதன் மேற்பட்ட அப்டேட்டில் பயன்படுத்தலாம்.
சொல்ல விரும்புவதை எப்படி தேர்ந்தெடுக்கலாம்
லுக் டூ ஸ்பீக் என்ற பயன்பாடானது இதன் பெயருக்கேற்ப கண்பார்வை மூலம் கட்டுப்படுத்தும் செயலியாகும். பயனர்கள் சொற்றொடர்களின் பட்டியலில் இருந்து தாங்கள் சொல்ல விரும்புவதை தேர்ந்தெடுத்து இடது, வலது மற்றும் மேலே பார்த்து கண் பார்வை மூலமாக தேர்ந்தெடுக்கலாம்.
லுக் டூ ஸ்பீக் செயலி உருவாக்கம்
லுக் டூ ஸ்பீக் செயலியானது கூகுள் கிரியேட்டிவ் குழுவும், பேச்சு மற்றும் மொழி சிகிச்சையாளர்களான ரிச்சர்ட் கேவ், எசேக்கியல் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். லுக் டூ ஸ்பீக் செயலியை கூகுள் ப்ளே பயன்பாட்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதை எளிதாக்க அம்சம்
பயன்பாட்டில் உள்ள சொற்களை பயனர்கள் கண் பார்வையின் மூலம் தேர்ந்தெடுக்கலாம். அதோடு இந்த செயலியில் பயனர்கள் தங்கள் பேச்சு மற்றும் செயல்பாட்டு சிரமங்கள் உள்ளவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதை எளிதாக்குவதன் நோக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது.
தேவைக்கேற்ப வடிவமைப்பு
இந்த செயலியானது ஒரு சமூகத்தினருக்கே பயன்படுத்தப்படும் நோக்கில் உருவாக்கப்பட்டது என்றும் இந்த செயலியை தகவல்தொடர்பு சாதனங்கள் மூலம் பயனடையும் குழுவினரை அணுகி அவர்களின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் போனை நேராக வைத்திருப்பது அவசியம்
லுக் டூ ஸ்பீக் பயன்பாட்டை பயன்படுத்தும் போது பயனர்கள் தங்களது மொபைல் போனை நேராக வைத்திருக்க வேண்டும். அதில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ள சொற்றொடர்களை பயனர்கள் கண்கள் மூலமாக இடது, வலது அல்லது மேல்பக்கமாக பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.
அடிப்படை தகவலை பகிரும் வகையில் வடிவமைப்பு
இந்த பயன்பாட்டில் உள்ள சொற்றொடர்கள் அடிப்படை தகவலை பகிரும் வகையில் உள்ளது. இதில் ஹலோ, நன்றி, ஓகே போன்ற அடிப்படை சொற்றொடர்கள் இருக்கிறது. அதோடு இதில் பெயர் என்ன, எப்படி இருக்கிறீர்கள் போன்ற கேள்விகளும் இருக்கிறது.