நீங்கள் புதிதாக வீடு கட்ட முடிவு செய்திருந்தால், நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கு பயன் தரக்கூடியதாக இருக்கும்.
முதலில் உங்களிடம் எவ்வளவு கை இருப்பு இருக்கிறது எவ்வளவு வரை நீங்கள் செலவு செய்யலாம் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து விடுங்கள். அப்போதுதான் நீங்கள் நினைக்கும் பட்ஜெட்டில் உங்களுடைய வீட்டை கட்ட முடியும்.
குறைந்தது 3 பில்டர்களிடம் Quotation பெற்றுக்கொள்வது நல்லது.
வெறும் பணம் மட்டுமே குறைவாக இருக்கும் என்பதற்காக யாரையும் தேர்தெடுத்து விடாதீர்கள். அவர்கள் இதற்கு முன் வீடுகள் கட்டி உள்ளார்களா என்பதை பற்றி விசாரியுங்கள். முடிந்தால் அவர்கள் கட்டி முடித்த வீட்டை ஒருமுறை சென்று பாருங்கள். வீட்டுக்காரரிடம் அவருடைய வேலை மற்றும் வீடு கட்டி முடிக்க எடுத்துக் கொண்ட காலம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
பில்டர் வேலை நடந்து கொண்டிருக்கும் வீட்டை காட்டினால் அதனை மறுத்து விடுங்கள். முழுவதுமாக வீடு கட்டி முடிக்கப்பட்டு நபர்கள் வசிக்கும் வீடு தான் வேண்டும். அதை அவர் காட்ட மறுத்து வேறு ஏதாவது காரணம் சொன்னால் நிச்சயமாக அவரால் உங்களுடைய வீட்டை குறித்த நேரத்தில் உங்களுடைய பட்ஜெட்டில் கட்டி கொடுக்க முடியாது.
REPORT THIS AD
சிவில் துறையை பொறுத்தவரை இரண்டு வகையான அமைப்புகளில் வீடுகள் கட்டப்படுகின்றன.
1.Load Bearing
இது நமது பழங்கால முறை, அதாவது பெரிய வகை கற்களை கொண்டு அஸ்திவாரம் அமைத்து பின்பு அதன் மேல் சுவர் எழுப்பி இறுதியில் கூரையில் கான்கிரீட் அமைப்பது. இவை இப்பொழுது பெரும்பாலும் கட்டப்படுவதில்லை. ஆனால், இது தரமானது அல்ல என பலரும் கூறுவது உண்மையல்ல. நீங்கள் இந்த அமைப்பை பயன்படுத்தி 3 அடுக்கு மாடி வரை கட்டலாம்.
இது மாதிரியான கட்டிடத்திற்கு பெரிய வகையில் பொறியாளர்கள் தேவை இல்லை. உங்களுக்கு தெரிந்த கொத்தனாரை கொண்டே இது போன்ற வீட்டை கட்டி முடிக்கலாம்.
2.Framed Structure :
மிக பெரிய வணிக வளாகங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும் இந்த அமைப்பை பயன்படுத்தி கட்டப்படுகின்றன.
இந்த அமைப்பை பயன்படுத்தி நீங்கள் வீடு கட்ட செலவு கொஞ்சம் அதிகம் ஆனாலும், இதன் பளுதாங்கு திறன் மிகவும் அதிகம். இந்த அமைப்பை பயன்படுத்தி வீடு கட்ட கண்டிப்பாக பொறியாளர்கள் தேவை. ஏனெனில் இதனை கொஞ்சம் திறன்பட செய்ய வேண்டும்.
வீடு கட்டும் முன்பு உங்களுடைய பகுதியின் தட்ப வெட்ப சூழ்நிலை மண்ணின் தாங்கு திறன் இவை பற்றி நான்கு ஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில் நீங்கள் கட்டும் கட்டிடத்தை தாங்கும் அளவுக்கு தேவையான Concrete Reinforcement சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.
இதனை துல்லியமாக கணக்கிட்டு கொடுக்க பொறியாளர்கள் கண்டிப்பாக தேவைப்படுவார்கள். ஏனெனில், இந்த Concrete Reinforcement என்பது சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். நீங்கள் பொறியாளர்கள் இல்லாத நபர்களை கொண்டு கட்டினால் 50 வருடம் இருக்க வேண்டிய கட்டிடம் 30 வருடத்திலேயே பழுதாக ஆரம்பித்து விடும்.
கட்டிடத்தின் பாதிப்பு என்பது உடனே நமக்கு தெரிய வராது. குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகளில் இருந்து வீடுகளின் பாதிப்பை உங்களால் உணர முடியும். ஆகவே இந்த மாதிரியான கட்டிடம் கட்டுவதில் சரியான பொறியாளர்களை தேர்ந்தெடுத்து வீடு கட்டுங்கள்.
இதற்கு இரண்டு வகையான வரைபடங்கள் தேவைப்படும்.
1.Architectural Drawings
வீடு கட்டும் முன்பு Architect ஒருவரை அழைத்து வீடு கட்ட போகும் இடம், உங்களிடம் அதற்காக உள்ள பட்ஜெட், வீடு எவ்வாறு இருக்க வேண்டும் உள்ளிட்டவற்றை கூறினால் அவர் அதற்கு ஏற்றாற்போல் உங்களுக்கு வரைபடம் உருவாக்கி தருவார். ஒரு சில பொறியாளர்கள் அவர்களாகவே இந்த வரைபடத்தை வரைந்து கொடுப்பார்கள்.
2.Structral Drawings
இது உங்களுடைய வீடு எவ்வளவு பளுவை தாங்கும் அதற்கு எவ்வளவு கம்பி எந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்பதை முன்கூட்டியே சொல்ல கூடிய வரைபடம். இதை நீங்கள் ஒரு Structural Consultant மூலமாக பெற்று கொள்ளுங்கள்.
இந்த இரு வகையான வரைபடம் இல்லாமல் வரும் எந்த பொறியாளரையும் நீங்கள் உங்களுடைய வீட்டை கட்ட அனுமதிக்காதீர்கள். இந்த இரு வரைபடமும் மிகவும் முக்கியம்.
மேலும் இது பற்றி விரிவாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுமையாக பாருங்கள்