2035ல் பாவனைக்கு வர உள்ள ஏர் பஸ் சீரோ- ஹைட்ரஜனை பெற்றோலுக்கு பதிலாக பாவிக்கிறது !
22 Sep,2020
சற்றும் காபன் டை ஆக்ஸைட்டை, வெளியிடாத மற்றும் ஹட்ரஜனை கொண்டு இயங்கக் கூடிய ஏர் பஸ் சீரோ என்ற விமானத்தை முதன் முதலாக தயாரித்து வானில் செலுத்தி வெற்றியடைந்துள்ளது ஏர் பஸ் நிறுவனம். எனவே இனி வரும் விமானங்கள் எரிபொருளை பாவிக்காது. குறிப்பாக பெற்றோலில் அது பறக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஹட்ரஜன் மூலக் கூறுகளில் இயங்கும் எஞ்சின்களை, ஏர் பஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த விமானங்கள் 2035ம் ஆண்டு தொடக்கம், மக்கள் பாவனைக்காக வருகிறது.