2021 ஜூன் வரை ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் - கூகுள் அனுமதி
29 Jul,2020
கொரோனா பரவலை அடுத்து உலகம் முழுவதும் ஐடி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் வீட்டில் இருந்தே தனது ஊழியர்களைப் பணியாற்றுமாறு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2021 ஜூன் வரை ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்றும் காலக்கெடுவை நீட்டித்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில்,
ஊழியர்கள் தங்களின் வருங்கால செயல்பாடுகளை திட்டமிட்டுக் கொள்ளும் வகையில், வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதியை நீட்டிக்கிறோம். இதன் மூலம் அலுவலகம் வந்து பணியாற்றத் தேவையில்லாத பொறுப்பில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும், ஜூன் 30, 2021 வரை வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் உலகம் முழுவதும் சுமார் 2 லட்சம் கூகுள் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.