அந்தரங்கம் கண்காணிக்கப்படுவதாக கூகுள் நிறுவனம் மீது வழக்கு
04 Jun,2020
கூகுள் இணையதளத்தை பயன்படுத்துபவர்கள் அந்தரங்கம் கண்காணிக்கப்படுவதாக அந்நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உலகளவில் இணையத்தேடலில் மிகவும் பிரபலமாக இருப்பது கூகுள் தேடுபொறி. இந்த இணையதள பயன்பாடு மிகவும் பாதுகாப்பானது என்பதால் இதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. ஆனால் தற்போது கூகுளின் “இன்காக்னிடோ மோட்“ பயன்படுத்தப்படும் போது அந்தரங்க உரிமைய மீறி பயனளார்களின் அந்தரங்கம் கண்காணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக கலிஃபோர்னியாவின் சான் ஜோஸில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் போயஸ் ஷில்லர் பிளெக்ஸ்னர் சட்ட நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், கூகுளை பயன்படுத்தவர்களின் செல்போன் அல்லது கணினி மூலம் பயனாளர்களின் அந்தரங்கம் மற்றும் அங்கீரிகரிக்கப்படாத தரவு சேகரிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு இழப்பீடாக கூகுள் நிறுவனம் 5 பில்லியன் டாலர் (ரூ.37,500 கோடி) வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் குறித்து கூகுள் செய்தி தொடர்பாளர் ஜோஸ் காஸ்டெனா கூறுகையில், “ஒவ்வொரு முறையும் புதிதாக டேப் திறக்கும்போது உங்கள் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் சேகரிக்க முடியும். இந்த பயன்பாட்டு முறையில் தேடும் போது நீங்கள் தேடப்பட்ட பட்டியல் (History) மிகவும் சிறந்த முறையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது“ என்று தெரிவித்துள்ளார்.