விமானத்தில் கொரோனா தடுப்பு இருக்கைகள்!
21 May,2020
'ஏரோபிளேன்' ஏறி வந்தவைதான் கொரோனா வைரஸ்கள். எனவே, விமான இருக்கைகளை வேறு விதமாக வடிவமைப்பதன் மூலம் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்கின்றனர் இத்தாலியை சேர்ந்த ஏவியோ இன்டீரியர்சின் வடிவமைப்பாளர்கள்.
அவர்கள் வடிவமைத்துள்ள, 'ஜானஸ்' என்ற இருக்கைகள், எதிரும் புதிருமாக உள்ளன. இரு இருக்கைகளுக்கு நடுவே கண்ணாடித் தடுப்பும், பயணியரின் பக்கவாட்டிலும் தலைக்கு மேலும் கண்ணாடி கவசமும் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், தொடுதல், தும்முதல் போன்றவற்றால் வைரஸ் பரவாமல் தடுக்கப்படுகிறது.இந்த வடிவமைப்பை விமான நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டால், அடுத்த சில மாதங்களில், பயணி இருக்கைகள், கொரோனா தடுப்பு இருக்கைகளாக மாறிவிடும் என எதிர்பார்க்கலாம்