கொரோனா வைரஸுக்கும் 5 ஜி இணையத்துக்கும் தொடர்பா?
06 Apr,2020
– முட்டாள்தனம் என்று கூறும் ஆய்வாளர்கள்
கொரோனா வைரஸ் பரவுவதற்கும் 5ஜி இணையத்துக்கும் தொடர்பு உள்ளது என வேகமாகப் பரவும் தகவல்களை ‘முட்டாள்தனமானது’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
5ஜி இணையத்துக்கும் கொரோனாவுக்கும் தொடர்பு இருக்கிறது. இதனால்தான் வைரஸ் உருவானது. இதனால்தான் பரவுகிறது எனப் பலர் ஃபேஸ்புக், ட்விட்டர், யு-ட்யூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.
இப்படியான தகவல்களை உண்மையென நம்பி பிரிட்டனில் செல்ஃபபோன் டவர்களை தாக்கி, தீயிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், தொலைத்தொடர்புத் துறை ஊழியர்களையும் தாக்கி உள்ளனர்.
இதனை அடுத்து களத்தில் இறங்கிய பிரிட்டன் அரசு, இவ்வாறான தகவல்கள் பொய்யானவை என்றும், இப்படியான தகவல்கள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் தங்கள் தளத்தில் உள்ள இவ்வாறான தகவல்களை நீக்கத் தொடங்கி உள்ளன.