மாணவர்களுடன் உரையாடிய சோபியா ரோபோ!
20 Feb,2020
உலகில் முதன் முதலில் குடியுரிமை பெற்ற சோபியா என்ற ரோபோ கொல்கத்தாவில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடியது.
செயற்கை நுண்ணறிவு மூலம் அழகான பெண்ணின் உருவம் போன்று உருவாக்கப்பட்டுள்ள சோபியாவுக்கு, 2017ம் ஆண்டு சவுதி அரசு குடியுரிமை வழங்கியது.
மனிதனை போல் பேசவும், கண்களை சிமிட்டவும், முகம் மற்றும் உடல் அசைவுகளை புரிந்து கொள்ளும் வகையிலும் சோபியா வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள பொறியியல் கல்லூரிக்கு பாரம்பரிய முறைப்படி சேலை அணிந்து கொண்டு வந்த சோபியாவுக்கு மேள தாளங்கள் முழங்க நடனமாடி வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவர்களுடன் பேசிய சோபியா, மனிதனின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் அதனை உணர முடியவில்லை என்றது.