சூரியனுக்கு மிகவும் அருகில் சென்று ஆய்வு நடத்தக்கூடிய செய்மதி விண்ணில் ஏவப்பட்டது!
13 Feb,2020
சூரியனுக்கு மிகவும் அருகில் சென்று ஆய்வு நடத்தக்கூடிய ஐரோப்பாவின் செய்மதி விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள கேப் கனாவெரல் தளத்திலிருந்து இது விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
இந்தத் திட்டமானது 1.5 பில்லியன் யூரோ பெறுமதியானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த செய்மதியில் கெமராக்கள், சென்ஸர்கள் உட்பட பல்வேறு உயர்தொழில்நுட்ப சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இவற்றினைக் கொண்டு சூரியனின் இயக்கத்திலுள்ள மிகவும் நுண்மையான விடயங்கள் கண்டறியப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.