நிலவில் மணிக்கு 300 மைல் வேகத்தில் செல்லும் லூனார் பைக்- லக்ஸஸ் கார் கம்பெனியின் சாதனை
22 Jan,2020
பூமியில் பயணிக்கும் வாகனங்கள் பலவற்றை, உற்பத்தி செய்து வரும் முன்னணி நிறுவனங்கள், தற்போது தமக்குள் பெரும் போட்டி ஒன்றுக்குள் இறங்கியுள்ளார்கள். அது என்னவென்றால் விண்வெளியில் உள்ள கிரகங்களில் ஓட்டக் கூடிய வாகனங்களை உற்பத்தி செய்வது தான் அது. முதன் முதலான டெஸ்லா(TESLA) கார் கம்பெனி, தனது மின்சார காரை தயாரித்து அதனை சந்திரனுக்கு அனுப்பிவைத்தது. இதனை தொடர்ந்து ஆரம்பமாகிய யுத்தம் இன்றுவரை முடிந்தபாடாக இல்லை. கார் உற்பத்தியில் மிக பிரபல்யமாக இருக்கும் டொயாட்டா(TOYOTA) நிறுவனத்தின், கிளை நிறுவனமான லக்ஸஸ்(LEXUS) கார் கம்பெனி, மேலும் ஒரு புதிய கண்டு பிடிப்பை நிகழ்த்தியுள்ளது.
அது தான் லூனார் பைக். இது உற்பத்திசெய்யும் ஒருவகையான மின் காந்த அலைகள். சந்திரனின் ஈர்ப்பு விசையில் இருந்து குறித்த மோட்டார் பைக்கை மேலே உயர்த்த வல்லது. எனவே சந்திரனின் நிலப்பரப்பை தொடாமலே அது சில அடி தூரத்தில் மிதக்க வல்லது. இதனுடன் பொருத்தப்பட்டுள்ள ராக்கெட் எஞ்சின் இயங்க ஆரம்பித்தால். அது மணிக்கு சுமார் 300 மைல் வேகத்தில் சந்திரனில் பயணிக்க வல்லது. எனவே சந்திரனின் மேல் பரப்பில் மனிதர்கள் இனி நீண்ட தூரம் பயணிக்கலாம் என்ற நிலை தோன்றியுள்ளது.
இது போல சுமார் 7 வகையான, விண்வெளி வாகனங்களை தற்போது லக்ஸஸ் கம்பெனி அறிமுகம் செய்துள்ளது.