மொபைல் சேவை வழங்கும் தொலைத் தொடர்பு நிறுவனத்தை இனி மூன்றே நாட்களில் மாற்றிக் கொள்ளலாம்
18 Dec,2019
மொபைல் சேவை வழங்கும் தொலைத் தொடர்பு நிறுவனத்தை இனி மூன்றே நாட்களில் மாற்றிக் கொள்ளலாம்.டிராய் வெளியிட்ட அறிக்கையில், தொலைத் தொடர்பு சேவையை மாற்றும் விதிகள் எளிதாக்கி இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் மொபைல் எண்ணில் இருந்து port என்றும் இடைவெளிவிட்டும் உங்கள் பத்து இலக்க தொலைபேசி எண்களை குறிப்பிட்டு 1900 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
இதையடுத்து UPC குறியீட்டு எண் குறுஞ்செய்தி மூலம் வழங்கப்படும். அருகில் உள்ள சேவை வழங்கும் நிறுவனத்திற்கு சென்று அதனை காண்பித்து அவர்கள் தரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தரவேண்டும்.
கட்டணம், ஆதாரம் போன்றவற்றை அளித்தால் புதிய சிம் கார்டை நீங்கள் விரும்பும் தொலைத்தொடர்பு நிறுவனம் உங்களுக்கு வழங்கும். இதன் மூலம் பழைய எண்ணை மாற்றாமலேயே புதிய சேவைக்கு மாறிக் கொள்ளலாம். அந்த எண்ணானது மூன்று நாட்களில் செயல்பாட்டுக்கு வந்துவிடும்