அமெரிக்கா சைபோர்க் ராணுவம்:
29 Nov,2019
சை-போர்க் என்று சொல்லப்படும், மனிதனோடு இயந்திரம் கலந்த ராணுவ வீரர்களை அமெரிக்கா ரகசியமாக உருவாக்கி வருகிறது. குறிப்பாக சொல்லப் போனால், சினிமா படங்களில் தான் இதனை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இது இன்று நிஜமாகிறது. அமெரிக்கா தயாரித்துள்ள சில வகை இயந்திரங்கள் மனிதரோடு இணைந்து செயல்பட வல்லது. உதாரணமாக குறித்த இந்த ராணுவ வீரர்கள் அணியும் தலைக் கவசம், மனித மூளையோடு சேர்ந்து இயங்க வல்லது. இதனூடாக அவர்கள் தமது ராணுவ வாகனங்களை, கை படாமலே இயக்க முடியும். தொலைவில் இருந்தும் இயக்க முடியும்.
இது போக கண்களுக்கு அருகே உள்ள சாதனம், தொலை நோக்கியாக செயல்படும். மற்றும் கைகளில் உள்ள நரம்புகளை அவர்கள் அணிந்திருக்கும் உடையில் உள்ள ஒரு பகுதி இணைந்து மேலும் வலுவான கரங்களாக மாற்றும். இதனால் இவர்கள் கைகள் ஒரு இரும்புக் கை போல மாறிவிடும். எனவே சாதாரண ராணுவத்தை விட, இவர்கள் மிக மிக பல சாலிகளாக. அசைக்க முடியாத திறமைகொண்டவர்களாக இருப்பார்கள். இது போன்ற சை-போர்க் ராணுவ உடைகளை, மற்றும் இயந்திரங்களை அமெரிக்கா ஏற்கனவே தயாரித்து வைத்துள்ளது.
தற்போது தான் இதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இது இன்ரர்நெட்டில் வைரலாக பரவி வருகிறது