கூகுளின் இந்த ஆப் உங்க போனில் இருக்கா.? அப்ப உங்களுக்கு ஆப்பு தான்.!
23 Nov,2019
கூகுளின் பல ஆண்ட்ராய்டு தொழில்நுட்பமானது, மக்களின் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கி இருக்கிறது என்றால் அது மிகையாகாது. ஆனால், அதே அளவிற்கு ஆபத்தையும், மக்கள்
வாழ்வில் கூகுள் ஏற்படுத்துகிறது. ஸ்மார்ட்போன் உபயோகிப்பவர்களின் பல அந்தரங்க தகவல்களையும், கடவுச் சொற்களையும், கணக்குகளையும் திருடர்கள் ஆன்லைனில் பல்வேறு வைரஸ் புரோகிராம்களை உருவாக்கி வைத்திருக்கின்றனர்.
மக்கள் உபயோகிக்கும் பல செயலிகளில் வைரஸ்களை புகுத்தி தேவையான தரவுகளை திருடி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஆபத்தை உருவாக்குகின்றனர். ஹேக்கர்கள் உபயோகிப்பதாக இதுவரைக்கும் 50-க்கும் மேற்பட்ட செயலிகளை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கியது.
இந்நிலையில், அந்த நிறுவனத்திற்கு சவால் விடும் விதத்தில் கூகுள் கேமரா செயலியையும் ஹேக்கர்கள் பயன்படுத்தி வருவது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. புகைப்படம் எடுக்க மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக்க கருதப்படும் அந்த செயலியை நாம் தரவிறக்கம் செய்து இருந்தால் நம்முடைய அனுமதி இல்லாமலேயே போனின் முன்பக்க மற்றும் பின்பக்க கேமராக்களை ஹேக்கர்களால் செய்து நாம் என்ன செய்கிறோம் என்பதை அந்தரங்கமாக படமாக்க முடியும்.
இப்படி ஒரு செயலி தங்கள் நிறுவனத்தில் இருந்தே ஹேக்கர்கள் உபயோகித்து இருப்பதை உறுதி செய்த கூகுள் நிறுவனம், இந்த பிரச்சினையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என தீவிரமாக செயலாற்றி வருகின்றது.