கில்லர் ட்ரோன்: சீனா இதனை விற்றுள்ள நாடு எது தெரியுமா ?
15 Nov,2019
தேனீக்கள் எப்படி கூட்டம் கூட்டமாக வந்து தாக்குதல் நடத்துமோ, அது போல மிக சிறிய ஆளில்லா விமானங்களை தயாரித்து. அதில் 34 குண்டுகள் உள்ள துப்பாக்கிகளை பொருத்தியுள்ளது சீனா. இவை குறி பார்த்து சுட வல்லவை. அதனால் சொல்லாப் போனால், ஒரு சிறிய ஆளில்லா விமானம் மட்டும் சுமார் 34 பேரை கொல்ல வல்லது. அப்படி என்றால், இது போன்ற 50 சிறிய விமானத்தை அனுப்பினால், ஒரு பட்டாலியன் ராணுவத்தையே ஆட்டம் காண வைக்க முடியும். நீங்கள் இங்கே பார்க்கும் புகைப்படம் முன்னர் வெளியிடப்படாதவை.
தற்போது தான் இந்த புகைப்படம் கசிந்துள்ளது. இந்த புகைப்படத்தில் குறித்த விமானத்தை பல மடங்கு பெரிதாக காட்டியுள்ளார்கள். ஆனால் உண்மையில் இது மிக மிக சிறியது. அப்படியே கூட்டமாக வந்தால், தன்க்கு எதிரி என்று யாரை உரிமையாளர் காட்டினாரோ அவரை சுட்டு தள்ளி முடித்துவிட்டும். இதில் பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதாம். மிக வேகமாகச் செல்ல வல்ல இந்த விமானங்கள், தோட்டாங்கள் முடிந்த கையோடு தமது உரிமையாளர் அல்லது தளத்திற்கு தானாக திரும்பிவிடும். எதிரில் வரும், ஆபத்துகளை தவிர்த்துக் கொண்டு செல்லக் கூடியது.
இது போன்ற விமாங்களை மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடு ஒன்றுக்கு, ரகசியமாக சீனா விற்றுள்ள விடையம். அமெரிக்கா போன்ற நாடுகளை பெரும் சங்கடத்தில் தள்ளியுள்ளதாம். இவை சிலவேளைகளில் ஐ.ஸ் தீவிரவாதிகளின் கைகளில் சிக்க கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது