மின்சாரத்தில் இயங்கும் விமானத்தை உருவாக்கும் பணியில் நாசா
10 Nov,2019
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, மின்சாரத்தில் இயங்கும் சிறிய ரக விமானத்தை உருவாக்கி வருகிறது.
எக்ஸ்.57 மேக்ஸ்வெல் எனப்படும் அந்த விமானம், இரட்டை என்ஜின் விமான தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. 2015ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்டு வரம் இந்த விமானத்தை முதல்முறையாக நாசா விஞ்ஞானிகள் வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தினர்.
மின்சார விமானங்கள், ஹோவர் கிராப்ட்களை உருவாக்கும் முயற்சியில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. நாசாவின் எக்ஸ் 57 விமானம், அரசு சான்றிதழுக்கான வடிவமைப்பு, தொழில்நுட்ப தரங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.