ராணுவ வீரர் ரோபோ!
04 Nov,2019
அமெரிக்காவின் மாசாசூசெட்சில் ((Massachusetts)) உள்ள ரோபோ தயாரிப்பு நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ள ராணுவ வீரர் ரோபோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாஸ்டன் டைனமிக்ஸ் ((Boston Dynamics)) எனும் அந்த நிறுவனம், பல்வேறு வகையான ரோபோக்களை உருவாக்கி வருகிறது.
தற்போது அட்லஸ் எனும் ராணுவ வீரர் ரோபோவையும், ஸ்பாட் எனும் நாய் ரோபோவையும் உருவாக்கியுள்ளது. அந்த ரோபோக்களை மையமாகக் கொண்டு, லாஸ் ஏஞ்செல்சை சேர்ந்த காரிடர் டிஜிட்டல் ((Corridor Digital)) எனும் நிறுவனம், புதிய வகை வீடியோவை தயாரித்து வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் அட்லஸ் ரோபோ, தம்மீதான தாக்குதல்களை சமாளித்து கொண்டு, பொம்மை இலக்குகளை சரமாரியாக துப்பாக்கியால் சுடுவது போன்ற பல்வேறு சாகசங்களை செய்கிறது.
நாய் ரோபோவான ஸ்பாட்டை சுடும்படி கூறும்போது, அதற்கு கட்டுப்படாமல், அருகில் இருப்போரை தாக்குகிறது. பின்னர் நாய் ரோபோவை தூக்கிக் கொண்டு பல அடி உயர மலை உச்சியில் இருந்து குதித்து தப்பிச் செல்லும் காட்சியும் உள்ளன.
உண்மையிலேயே தத்ரூபமாக இருக்கும் வகையில் வீடியோ காட்சிகள் உள்ளன. யூ-டியுப்பில் வெளியாகியுள்ள இந்த காட்சியை இதுவரை 20 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர்.