வாட்ஸ்அப் பே சர்வீஸ்ஸ 2 மாதத்திற்குள் வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அப்டேட்..!
17 Oct,2019
இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் பல கோடி மக்கள் தினசரி பயன்படுத்தும் ஒரு செயலியாக தற்போது வாட்ஸ்அப் மாறி உள்ளது. வாட்ஸ் அப்பை பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கிய பின்னர் வாட்ஸ்அப்பில் பல்வேறு அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.மேலும் வாட்ஸ்அப்பில் பாதுகாப்பு வசதியை அதிகரிக்கும் நோக்கிலும்
பயனாளிகளை கவரும் விதத்திலும் புதிய அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் எதிர்கால அப்டேட்களை கருத்தில் கொண்டு தற்போது வாட்ஸ் அப்பில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அப்படி ஏற்கனவே பரிசோதனைகளில் இருந்த ஒரு வாட்ஸ்அப் அப்டேட் தான் “வாட்ஸ்அப் பே சர்வீஸ்”. இது முழுக்க முழுக்க டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்காக உருவாக்கப்பட்ட ஒரு அப்டேட் ஆகும். இந்த அப்டேட் மூலம் பணப் பரிவர்த்தனைகளை எளிமையாக வாட்ஸ்அப் மூலம் பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.மேலும் இது கூகுள் பே, பேடிஎம் போன்று எளிமையான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த “வாட்ஸப் பே சர்வீஸ்” இன்னும் 2 மாதத்திற்குள் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகமான பயனர்களை வாட்ஸ்அப் கொண்டுள்ளதால் பணப்பரிவர்தனை எளிமையாக நடக்கும் என்றும் மேலும் வாட்ஸ்அப் பயனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த “வாட்ஸ்அப் பே சர்வீஸ்” இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.