இந்தியாவின் “NAVIC” நாடு முழுவதும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் 
                  
                     09 Oct,2019
                  
                  
                      
					  
                     
						
	 
	இந்தியாவின் “NAVIC” நாடு முழுவதும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் செய்யப்படும் அதிரடி மாற்றம் ! உங்கள் மொபைலில்
	வந்துவிட்டது இந்தியாவின் “NAVIC” நாடு முழுவதும் செல்போன் உள்ளிட்ட அனைத்திலும் செய்யப்படும் அதிரடி மாற்றம் ! உங்கள் மொபைலில்
	
	இந்திய அரசு தொழில்நுட்பம் மற்றும் நாட்டின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அதிரடியான முடிவினை எடுத்துள்ளது. இந்தியா முழுவதும் தற்போது போக்குவரத்து மற்றும் இருப்பிடத்தை அறிய அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான GPS அமைப்பை தான் பயன்படுத்தி வருகிறோம்.
	இதன் உதவியுடன்தான் கூகுள் மேப் உள்ளிட்ட அனைத்து ஆப்களும் இயங்கி வருகின்றன. மேலும் இவற்றின் மூலம் தற்போது இந்தியாவின் அனைத்து இருப்பிடங்களும் அண்டை நாடுகளுக்கும் குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் தெரியும் வகையில் அமைந்து விட்டது. வளர்ந்த நாடுகளான ரஷியா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா ஆகியவை தங்களுக்கு என்று பிரத்தியேக புவி சார் இருப்பிட அமைப்பை தங்கள் நாடுகளில் பயன் படுத்தி வருகின்றன.
	அமெரிக்காவின் ஜி.பி.எஸ் தவிர ரஷ்யாவின் க்ளோனாஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் கலிலியோ, சீனாவின் பெய்டோ ஆகிய இருப்பிடத்தை அறியும் செயற்கைக்கோள் அமைப்புகள் உள்ளன. எனவே இந்தியாவும் தனது நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கடந்த 2017- ம் ஆண்டு ₹ 1470 கோடி செலவில் IRNSS 1-G செயற்கைகோளை விண்ணில் ஏவி இந்தியாவிற்கு என்று பிரத்தியேகமான பயன்பாடான NaviC எனப்படும் இருப்பிட பயன்பாட்டு முறையை கொண்டுவந்தது.
	இதன்மூலம் இந்தியா மற்றும் இந்தியர்கள் பிற நாட்டவர்களின் உதவியில்லாமல் தங்கள் நாட்டின் NAVIC தொழிநுட்பத்தை பயன்படுத்து 5 மீட்டர் அக்குரஸி உடன் 1500 கிலோமீட்டர் தொலைவை கடக்கலாம் எனும் மிக பெரிய சாதனையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ நிகழ்த்தியது. அமெரிக்காவின் தயாரிப்பான GPS அக்குரஸி 20-30 மீட்டர் ஆகும்.
	அதனை தொடர்ந்து நாடுமுழுவதும் NAVIC பயன்படுத்துவது குறித்தும், அதனை நடைமுறை படுத்துவது குறித்தும் அதனால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்தும் மத்திய அரசு ஆராய்ந்து வந்தது, தற்போது அதில் அதிரடி முடிவினை எடுத்துள்ளார் மோடி, வருகிற 2020 – ஆண்டில் இருந்து இந்தியாவில் அனைத்து செயல்பாடுகளும் செல்போன், மேப், போக்குவரத்து, கடல் பயணம், விமானப்பயணம், இராணுவ பயன்பாடு உள்ளிட்ட அனைத்திலும் நமது தயாரிப்பான NAVIC செயல்பாட்டிற்கு வர இருப்பதாக தெரியவந்துள்ளது.
	ஒரு நாடு வல்லரசு ஆவதற்கு முன்பு மற்ற நாடுகளின் உதவியின்றி அனைத்திலும் தன்னிறைவு பெறவேண்டும் அதனை கருத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு அதிரடியாக பல மாற்றங்களை செய்து வருகிறது. தற்போது மத்திய அரசின் இந்த திட்டத்தால் நாடு பாதுக்காப்பு அடைவது மட்டுமல்லாமல், ஆண்டிற்கு $45 மில்லியன் டாலர் பணம் மிச்சமாகும் என்றும் அது இந்தியாவிற்கு கிடைக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
	மத்திய அரசின் அதிரடியை தொடர்ந்து நமது செல்போன் முதல் அனைத்திலும் இனி இந்தியாவின் தயாரிப்பான NAVIC இடம்பெறும் ஒவ்வொரு இந்தியர்களும் பெருமை படக்கூடிய நிகழ்வு இது.